தீபம் வழக்கில்.. உச்சநீதிமன்றத்தால் முழுமையாக அமலுக்கு வந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் தீப வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கொடுத்த இடைக்கால தடையை நீக்குவதாக உச்சநீதிமன்றம் இன்று தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் பஞ்சோலி அடங்கிய அமர்வு, திருப்பரங்குன்றம் தீப விஷயத்தில் மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

Thiruparankundram

அதாவது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நவம்பர் 20 அன்று விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நீக்கி உள்ளதாக தெரிவித்திருக்கிறது. இதன் மூலம், சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக குறிப்பிட்ட தீர்ப்பு, இப்போது முழுமையாக மீண்டும் உயிர் பெற்று நடைமுறைக்கு வந்து விட்டது. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

நவம்பர் 20 அன்று உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து விட்டு.. வழக்கு முடியும் வரை, இந்த ஒரு முறை மட்டும் தீப தூணில் தீபம் ஏற்றலாம் உத்தரவை பிறப்பித்து இருந்தது. தமிழக அரசும், அதிகாரிகளும், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மதிக்காததால்.. அந்த இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதனால் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் முழு தீர்ப்பு இப்போது சட்டப்பூர்வமாக அமலுக்கு வந்துவிட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை இருந்த வரை, அந்த தீர்ப்பின் அடிப்படையில் யாரும் உரிமை கோர முடியாத நிலை இருந்தது. இப்போது தடை நீக்கப்பட்டு விட்டதால்.. கோயில் நிர்வாகமும் அல்லது மாநில அரசோ! உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. உயர் நீதிமன்ற உத்தரவு மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதால், நாளை மட்டுமல்லாமல்.. கார்த்திகை மாதத்தில் இதர நாட்களிலும் விதிகளுக்கு உட்பட்டு தீபம் ஏற்றுவதற்கான சட்டபூர்வ வழி திறக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த தவறிய கோயில் அறங்காவலர் குழு சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் சிஆர்பிஎப் படை உயர் நீதிமன்ற உத்தரவை நேரடியாக நிறைவேற்றும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+