கனிமொழி விடலையே.. ஆட்சியர் புகாரில் பெயரை நீக்க முயற்சி? விஜய்யின் மவுனத்தை சுட்டிக்காட்டி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தை முதன்முதலில் பொதுவெளிக்குக் கொண்டுவந்து, தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, இப்போது மேலும் ஒரு புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரிலிருந்து தலைமைச் செயலாளர் பெயரை நீக்க முயற்சி நடந்ததாக எழுந்துள்ள தகவலைச் சுட்டிக்காட்டியுள்ள மூத்த தலைவர் கனிமொழி, முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருக்கும் பெண் ஐஏஎஸ் அதிகாரி பத்மஜாவிடம், ஆளும் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. அவருக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் வெளியானபோதே கனிமொழி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Kanimozhi

திமுக எம்பி கனிமொழி

தொடர்ந்து இந்தப் பிரச்சினையை எழுப்பி வந்த கனிமொழி, மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் கேள்வி எழுப்பியிருந்தார். மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார் அளித்த பிறகும், முதலமைச்சர் விஜய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேட்டிருந்தார்.

இதனிடையே, நவம்பர் 23-ம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது, மாவட்ட ஆட்சியரிடமிருந்தோ தலைமைச் செயலாளரிடமிருந்தோ புகார் வரவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. கோர்ட் அப்படி சொன்னமே மறுநாளே மாவட்ட கலெக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்

இப்படிப்பட்ட சூழலில், மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரிலிருந்து தலைமைச் செயலாளர் பெயரை நீக்க முயற்சி நடந்ததாக பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "எனக்கு மிகவும் நம்பகமான நண்பர் ஒருவர் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 31-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரிலிருந்து தலைமைச் செயலாளரின் பெயரை நீக்குமாறு மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் அவருக்கு அறிவுரை வழங்கியதாக அந்த நண்பர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டு, நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிடும் என்று நம்புகிறேன். ஒரு அதிகாரியையும், குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசியல்வாதியையும் காப்பாற்றுவதற்காகச் செய்யப்பட்ட இழிவான குற்றச்செயல் இது" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

கனிமொழி கேள்வி

மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனின் இந்த பதிவை ஷேர் செய்துள்ள கனிமொழி, ட்வீட் ஒன்றையும் அத்துடன் சேர்த்து பதிவிட்டுள்ளார்.. அதில், "பல ஊடகவியலாளர்களும் தெரிவிக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரிலிருந்து தலைமைச் செயலாளரின் பெயரை நீக்க முயற்சிகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும், முதலமைச்சர் @TVKVijayHQ தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?

உயர்நீதிமன்றம் இக்குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு உட்படுத்தி, எவ்வித அரசியல் அழுத்தமோ, அதிகாரத் தலையீடோ இல்லாமல் காவல்துறை விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மீண்டும் கேள்வி எழுப்பும் கனிமொழி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தை ஆரம்பத்திலேயே வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த திமுக எம்.பி. கனிமொழி, தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் குரல் கொடுத்து வருகிறார். தற்போது ஆட்சியர் அளித்த புகாரிலிருந்து தலைமைச் செயலாளர் பெயரை நீக்க முயற்சி நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம் வெளியான தொடக்கத்திலிருந்தே கனிமொழி இந்தப் பிரச்சினையை எழுப்பி வருகிறார்... பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏன்? புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றெல்லாம் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்.

இப்போது மாவட்ட ஆட்சியர் புகாரிலிருந்து தலைமைச் செயலாளர் பெயரை நீக்க முயற்சி நடந்ததாக வெளியாகியுள்ள புதிய குற்றச்சாட்டையும் உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது, வழக்கின் தீவிரத்தை மேலும் உணர்த்தியிருக்கிறது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+