குற்றவாளிகளை காப்பதுதான் தவெக அரசின் ஒரே கொள்கையா?- டிரைவர் பாலகிருஷ்ணன் மரண வழக்கில் கனிமொழி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: "இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் டிரைவர் பாலகிருஷ்ணன் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்" என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்ற லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணன் கடந்த 11 ஆம் தேதி காவல் நிலைய கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடற்கூறாய்வில் அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Kanimozhi Demands CBI Probe into Driver Balakrishnan s Death Criticises TVK Government

இந்த வழக்கில் உண்மையைக் கண்டறிய டிரைவர் பாலகிருஷ்ணனின் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, உடல்கூறாய்வு அறிக்கையில் பாலகிருஷ்ணனின் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனில், சம்பந்தப்பட்டவா்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உயிரிழந்த பாலகிருஷ்ணனை வாலந்தூா் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்து, பின்னா் செக்கானூரணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றது ஏன்? இந்த விவகாரத்தில் பாலகிருஷ்ணன் கைதும் செய்யப்படவில்லை, அவா் மீது வழக்குப் பதிவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில், இரு நாள்கள் அவரை ஏன் காவலில் வைத்தீா்கள்? வாலாந்தூா் காவல் ஆய்வாளா் செக்கானூரணி காவல் நிலையத்துக்கு வந்தது ஏன்? உயிரிழந்த ஓட்டுநா் பாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கியதுபோல் புகைப்படம் எடுக்கவில்லையா?' என நீதிபதிகள் சரமரியாக கேள்வி எழுப்பினா்.

செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநா் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில் அங்கு பணிபுரியும் காவலா்கள் அனைவருமே கைது செய்யப்பட வேண்டியவா்கள்தான். இதுதொடா்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் இப்படித்தான் விசாரிப்பதா? யாரைப் பாதுகாக்க நினைக்கிறீா்கள்? டிரைவர் பாலகிருஷ்ணன் காவல் நிலைய கொடுமையால் உயிரிழந்திருப்பது உறுதி. ஆனால், இதற்கு யாா் காரணம் என்பதுதான் தற்போது பிரச்சனை எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை எழுப்பிய கேள்விகளைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், "மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், அப்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது.

புகார் அளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்துகொள்ள ரூ. 3 லட்சமும் அரசு வேலையும் தருவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது?

பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+