தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் புகார்.. விசாரணை குழு அமைத்த தமிழக அரசு.. தலைமை யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ், (POSH Act) கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க குழு அமைத்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 60 நாட்களில் விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் தலைமையில் காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியரிடம் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

POSH Act

இந்த நிலையில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ், (POSH Act) கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க குழு அமைத்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 4 பேர் கொண்ட குழுவில் சட்டம், மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் வனத்துறை செயலர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவுக்கு வனத்துறை செயலர் காகர்லா உஷா பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மதுமதி, சட்டத்துறை செயலர் சுமதி, சுனிதா ஜோ ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த விசாரணையை 60 நாட்களில் முடித்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் ஜூலை 31ஆம் தேதியே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், 116 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

தற்போது காவல்துறை விசாரணை நடந்து வரும் சூழலில், விசாரணைக் குழுவை தலைமைச் செயலாளர் சாய் குமார் அமைத்துள்ளார். இதனால் இந்த குழுவின் விசாரணை அறிக்கை ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த விசாரணை அறிக்கைக்கு பின் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+