கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தயாரா சிஎம் சார்? விஜய்க்கு அப்பாவு கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் ஆட்சியருக்கு, ஆபாச மெசேஜ் அனுப்பிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க தயாரா என முதல்வர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் இல்லத்திற்கு இரவு நேரத்தில் குடி போதையில் சென்று பாலியல் தொல்லையும் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் சீண்டலும் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

CM Vijay

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜூலை 31 தேதியே அரசின் கவனத்திற்கு தெரிவித்த பின்பும் சுமார் 4 மாத காலம் முதலமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலர் மற்றும் DGP உட்பட அனைவரும் இந்த சம்பவத்தை மூடி மறைத்ததோடு, சட்ட அமைச்சர்
நிர்மல் குமார் மற்றும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன், தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெறவில்லை என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததோடு பொறுப்புள்ள மாவட்ட ஆட்சியரை மன வேதனையடையச் செய்தது வெட்கக் கேடானது CM sir ?

தவெக MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து அவரைப் தொடர்ந்து 4 மாத காலம் பாதுகாக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டு வந்த முதலமைச்சர், சட்ட அமைச்சர், தலைமை செயலாளர் , உள்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைவர் உட்பட மேற்படி குற்றசம்பவத்திற்கு அனைவருமே காரணமாக இருந்தது உறுதியானதால் மீண்டும் உங்கள் தலைமையில் இருக்கின்ற காவல்துறை மூலம் நியாயம் கிடைக்குமா?
CBI-க்கு வழக்கை மாற்ற தயாரா CM sir ?

தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அதிமுக MLA-க்களை விலைக்கு வாங்கி பதவியை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் இடைத்தேர்தல் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வரே ! தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் #தவெக MLAக்களான அருள் விக்னேஷ், சரவணன், துணை சபாநாயகர் ரவி சங்கர், அமைச்சர்களான கில்லி சரத், விஜய பாலாஜி, நிர்மல் குமார், ராஜ்மோகன், காந்திராஜ், ஜெகதீஸ்வரி, கீர்த்தனா இவர்கள் பதவியையும் ராஜினாமா செய்ய வைத்து உங்கள் கட்சியிலிருந்து விடுவித்து #இடைத்தேர்தல் நடத்த தூய ஆட்சி முன்வருமா CM sir ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பி, அவரது முகாம் அலுவலகத்திற்கு மதுபோதையில் சென்று தொல்லை கொடுத்த விவகாரத்தில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது விசாரணையை ஐஜி காமினி ஐபிஎஸ் கண்காணிப்பார். இந்த நிலையில் எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார். அங்கு எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் இன்றே விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+