பிளிப்கார்ட் சிஇஓ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி திடீர் விலகல்.. 11 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான பிளிப்கார்ட் நிறுவனத்தில் மிக முக்கிய நிர்வாக மாற்றம் நடந்துள்ளது. அந்நிறுவனத்தின் குரூப் சிஇஓவான கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தனது பதவியில் இருந்து விலகியது மட்டுமின்றி, நிறுவனத்தை விட்டே வெளியேறுகிறார். 11 ஆண்டுகளுக்கும் மேலாக பிளிப்கார்ட்டில் பணியாற்றிய அவரது இந்த திடீர் ராஜினாமா பேசுபொருளாகியுள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று பிளிப்கார்ட். 2007ம் ஆண்டு இந்தியர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோரால் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட், பிறகு அமெரிக்காவின் வால்மார்ட் கைகளுக்கு சென்றது. இப்போது இந்தியாவில் அமேசானுக்கு போட்டியாக பிளிப்கார்ட் இருந்து வருகிறது. இந்தியாவின் மிக பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக பிளிப்கார்ட் உள்ளது. இந்நிறுவனத்தில் 50 கோடிக்கும் அதிகமான யூசர்கள் உள்ளார்கள்.

Flipkart CEO Resigns

கல்யாண் கிருஷ்ணமூர்த்தி

இதற்கிடையே அந்த நிறுவனத்தை வழிநடத்தி வந்த குரூப் சிஇஓவான கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். மேலும், நிறுவனத்தில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்துள்ளார். கல்யாண் கிருஷ்ணமூர்த்திக்கு பதிலாக புதிய தலைவரை அடுத்த சில வாரங்களில் நியமிக்க உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவரை பிளிப்கார்ட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருக்கும் பாலாஜி தியாகராஜன் நிறுவனத்தை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்யாண் கிருஷ்ணமூர்த்தியின் திடீர் ராஜினாமா குறித்து பிளிப்கார்ட் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

யா் இவர்

கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கடந்த 2017 ஜனவரி மாதம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றார். பின்னர் 2018ஆம் ஆண்டு குரூப் சிஇஓவாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் பிளிப்கார்ட் இ-காமர்ஸ் துறையை தாண்டி மளிகை பொருட்கள் விற்பனை, ஃபின்டெக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் தனது ஆபரேஷன்களை விரிவுபடுத்தியது.

கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், பிளிப்கார்ட்டை வாங்கியது. அப்போதும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி முக்கிய பங்காற்றினார். அதன்பிறகு, பிளிப்கார்ட் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அவரது டீம் மேற்கொண்டு வந்தது. பிளிப்கார்ட்டில் இணைவதற்கு முன்பு, அவர் டைகர் குளோபல் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். அப்போது இந்தியாவில் அந்த முதலீட்டு நிறுவனத்தின் கீழ் இருந்த நிறுவனங்களை அவர் கவனித்து வந்தார். இதற்கு முன்பு இமே நிறுவனத்திலும் நிதி பிரிவில் பணியாற்றியுள்ளார்.

அடுத்து என்ன

அதேநேரம் கல்யாண் கிருஷ்ணமூர்த்தியின் விலகலை தொடர்ந்து வால்மார்ட் நிறுவனம் தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி விலகல் குறித்து எதுவும் கூறப்படவில்லை என்றாலும். இந்தியாவில் பிளிப்கார்ட்டின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என கூறியுள்ளது.

இதற்கிடையே பிளிப்கார்ட்டை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், 11 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த கல்யாண் கிருஷ்ணமூர்த்தி திடீரெ பதவி விலகியுள்ளது கவனம் பெற்றுள்ளது. அவருக்கு பதிலாக அடுத்து யார் சிஇஓ பதவிக்கு வருவார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+