Amazon: அமேசான், பிளிப்கார்ட் பார்சல்கள் ஏன் பிரவுன் நிற அட்டை பெட்டியில் டெலிவரி ஆகிறது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த பார்சலாக இருந்தாலும் பிரவுன் நிறத்தில் காகித பைகள், பெட்டிகளில் அடைத்து தரப்படுவது ஏன் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். வெள்ளை நிறமோ அல்லது மற்ற நிறங்களிலோ ஏன் பார்சல் செய்யப்படுவது கிடையாது.

அமேசான், பிளிப்கார்ட் என ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது அவை புத்தகங்களாக இருந்தாலும், ஆடைகளாக இருந்தாலும், அணிகலன்களாக இருந்தாலும், பைகள், மற்ற வீட்டு உபயோக பொருட்களாக இருந்தாலும் அவற்றை ஏன் பிரவுன் நிற கவர் அல்லது அட்டை பெட்டியில் போட்டுக் கொடுக்கிறார்கள் என்பது தெரியுமா?

boxes

ஏன் வெள்ளை, சிகப்பு அல்லது வேறு நிறங்களில் கொடுக்கப்படுவதில்லை என்பதாவது உங்களுக்கு தெரியுமா? என்றாவது அது ஏன் என யோசித்து பார்த்துள்ளீர்களா? அதற்கு காரணம், மரங்களின் கூழிலிருந்து காகிதம் தயாரிக்கப்படும் போது அது இயற்கையாகவே பழுப்பு நிறத்தில்தான் இருக்கும்.

அட்டைப்பெட்டிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பேப்பர் கிராஃப்ட் பேப்பர். இது இயற்கையாகவே பழுப்பு நிறத்தில்தான் இருக்கும். இந்த காகிதத்தை வெள்ளையாக்க, ரசாயனங்கள் மூலம் வெளுக்க வேண்டும். இந்த ரசாயன செயல்பாட்டை தவிர்ப்பதால் காகிதம் தன் இயற்கையான பழுப்பு நிறத்திலேயே இருக்கிறது.

ஜெர்மன் மொழியில் கிராஃப் என்றால் வலிமையானது என்று பொருள். கிராஃப்ட் முறையில் தயாரிக்கப்படும் காகித இழைகள் நீண்டதாகவும் உறுதியாகவும் இருக்கும். இதில் சூடான உணவு பொருட்கள், வெயிட்டான பார்சல்கள், எண்ணெய் பொருட்கள் என எதை எடுத்துச் சென்றாலும் பெட்டிகள் எளிதில் கிழியாது.

கிராஃப்ட் நிற காகிதங்களை வேறு நிறத்தில் மாற்றுவதற்கான உற்பத்தி செலவும் குறைகிறது. இதனால்தான் பார்சல் நிறுவனங்கள் இந்த பழுப்பு நிற பெட்டிகளை பயன்படுத்துகிறார்கள்.

மேலும் பழுப்பு நிற கிராஃப்ட் பெட்டிகள் 100 சதவீதம் மட்கும் திறன் கொண்டவை. எளிதாகவும் மறுசுழற்சி செய்யலாம். இந்த பெட்டிகளில் ஆபத்தான ரசாயனங்கள் பயன்படுத்தப்படாததால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

தற்காலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை சார்ந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது ஒரு நவீன கார்ப்பரேட் அடையாளமாக மாறியுள்ளது.

பெட்டியில் அலை அலையாக இருக்கும் மடிப்புகள் அழுத்தத்தை தாங்கும் வலிமைக்கு உதவுகிறது. இது பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் அனைத்து பொருட்களும் பிரவுன் நிற கவர், பெட்டிகளில் வருகின்றன. அது போல் மருந்துகளும் பிரவுன் நிற கவரில் கொடுக்கிறார்கள். உணவு தின்பண்டங்களும் பிரவுன் நிற கவரில் கொடுக்கப்படுகிறது.

எனவே பொருட்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது எந்தளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு நாம் பயன்படுத்தும் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அட்டை பெட்டிகளில் உடைய கூடிய பொருட்களை கொண்டு சென்றாலும் அதை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். எந்த பக்கத்தில் பிடித்து தூக்க வேண்டும் என்பதை கூட அந்த அட்டை பெட்டியில் குறிப்பிட்டிருப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+