கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவு: துபாயில் தவெகவினர் கண்ணீர் மல்க மௌன அஞ்சலி!

Subscribe to Oneindia Tamil

துபாய்: சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ-வாக இருந்த வி.எஸ். பாபு அண்மையில் உடல்நலக் குறைவால் காலமானார். 2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவரது மறைவு, கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மறைந்த எம்எல்ஏ வி.எஸ். பாபு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழக வெற்றிக் கழகம் - துபாய் கிளை சார்பில் சிறப்பு இரங்கல் கூட்டம் துபாயில் நடைபெற்றது.

Dubai TVK Members

இந்நிகழ்ச்சியில் துபாய் தவெக நிர்வாகிகள் ரகுவரன், இஸ்மாயில், சதீஷ், ஹாஜா, அஜ்மல், சபாரி, சாதிக் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் முத்துலட்சுமி, கவிதா, ஆயிஷா நிசார் உள்ளிட்ட ஏராளமான கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Dubai TVK Members

கூட்டத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வி.எஸ். பாபு அவர்களின் திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு துபாய் தவெக சார்பில் ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+