இடைத்தேர்தல் முடிவுக்கு பின் மறுசீரமைப்பு.. சோகத்தில் திமுக நிர்வாகிகள்.. அறிவாலயத்தின் முடிவு என்ன?
சென்னை: 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது. சீனியர் நிர்வாகிகள் பலருக்கும் பதவி மீண்டும் கிடைக்காது என்பதால், திமுக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் இளம் நிர்வாகிகள் சோகம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்ததாக திருச்சி கிழக்கு, விராலிமலை, பெருந்துறை, கரூர், அம்பாசமுத்திரம் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கு தவெக, திமுக, அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

இதனிடையே கடந்த வாரத்தில் திமுக சார்பாக புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த பட்டியல் ஸ்டாலினுக்கு ஏற்புடையதாக இல்லாததால், அது வெளியிடப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு பின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்பின் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்ட ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு கொண்டு வரப்பட்டது. அதேபோல் 110 மாவட்டங்களாக திமுக அமைப்பு வாரியாக பிரிக்கப்பட்டது. அதன்பின் மாவட்ட வாரியாக மறுசீரமைப்பு குழு சென்று ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து திமுக தலைமை சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டது.
இதற்கு இடைத்தேர்தலும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுகவில் பதவி கிடைக்காதவர்களுக்கு தவெகவில் வலை விரிக்கப்பட்டு வருகிறது. மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதால், இடைத்தேர்தல் பணிகளில் சிக்கல் உருவாகுமோ என்று ஸ்டாலின் கருதுகிறார். அதுவும் 70 வயது கடந்த சீனியர்கள் ஏராளமானோர் பதவியை இழக்கின்றனர்.
அவர்களுக்கான மாற்று பதவிகள் குறித்து இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால் சீனியர் நிர்வாகிகள் திமுகவில் இருந்து விலகொஇ தவெக அல்லது அதிமுக பக்கம் நகர்ந்துவிடக் கூடாது என்று கருதுகிறது. ஆனால் இளம் நிர்வாகிகள் பலரும் சோகம் அடைந்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் தான் மறுசீரமைப்பு பணிகளை திமுக மேற்கொள்ளும் என்ற பேச்சுகளும் அதிகரித்துள்ளது.



Click it and Unblock the Notifications
