ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர் சூட்டும் அறிவிப்பு என்ன ஆனது? RTI-ல் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு, சுதந்திரப் போராட்டத் தியாகி நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை அறிவிக்கப்படாததால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI act- Right To Information act) கேட்ட போது அங்கிருந்து கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது விழாவில் பங்கேற்ற அப்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தியாகி நல்லகண்ணு பிறந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருந்தார்.

Srivaikuntam

தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாது அந்த தியாகி குறித்து அறிந்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தியாகி நல்லகண்ணுவின் தியாகத்தையும், பொது வாழ்வையும் போற்றும் வகையில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

நல்லகண்ணுவின் பெயர்

ஆனால், முதல்வராக இருந்த ஸ்டாலின் அறிவிப்பு வெளியாகி சுமார் இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு இதுவரை தியாகி நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படவில்லை. இதற்கிடையில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணுவின் பெயரை வைக்காதது குறித்து அப்பகுதியை சேர்ந்த சித்திரைவேல் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மருத்துவத் துறை இயக்குநர் அலுவலகத்தில் தகவல் கோரியிருந்தார்.

நல்லகண்ணுவின் பெயர் சூட்ட அரசாணை வரவில்லை

இதற்கு பதிலளித்துள்ள தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தகவல் அலுவலர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சுதந்திரப் போராட்டத் தியாகி நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்பட்டதற்கான அரசாணை விவரம் எதுவும் இம்மருத்துவமனைக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி

இதுகுறித்து சித்திரைவேல் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "முன்னாள் முதல்வர் அறிவித்து இரண்டு ஆண்டுகளாகியும் அதற்கான அரசாணை விவரம்கூட சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குக் கிடைக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மருத்துவத் துறையினர் அளித்துள்ள இந்தப் பதில், தியாகி நல்லகண்ணுவின் குடும்பத்தினர், ஸ்ரீவைகுண்டம் பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம் நடைபெறும்

முன்னாள் முதல்வரின் இந்த அறிவிப்பை தற்போதைய முதல்வர் நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்த நல்லகண்ணு

நல்லகண்ணு வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலை சீராகி மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தார். அந்த வகையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி உடல்நல பாதிப்பு காரணமாக சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

25 நாட்கள் சிகிச்சை

பல்வேறு துறை மருத்துவக் குழுவினர் 25 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி நல்லகண்ணு இந்த உலகை விட்டு மறைந்தார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+