தலைக்கேறிய போதை.. கோவை மூதாட்டிக்கு நடந்த கொடூரம்.. மகனும், மருமகனும் பண்ணற வேலையா இது

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. வீடு, பொது இடங்கள் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. சாதாரண பெண் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் வரை எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்நிலையில் கோவையில் மதுபோதையில் பெற்ற தாயை, மகன் கத்தியில் குத்தி கொலை செய்தார். கொலையை மறைக்க மூதாட்டியின் மகனும், மருமகளும் போட்ட திட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் முட்டத்துவயல் கிராமம் உள்ளது. அந்த கிராமத்திற்குட்பட்ட காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சி (வயது 60). இவருக்கும் இவரது மகன் அனந்தபாபு (வயது 38). அனந்தபாபுவுக்கும், மீனாட்சிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. முக்கியமாக அனந்தபாபுவின் திருமணம் தொடர்பாக தாய், மகன் இடையே தொடர்ச்சியான குடும்பத் தகராறுகள் தொடர்ந்து வந்தன. இதனால் வீட்டிற்குள் எப்போதும் கூச்சல், குழப்பம் இருக்குஙம.

Coimbatore Old lady murder

தாயை கொலை செய்த மகன்

நேற்று இரவு அனந்தபாபு மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தாய் மீனாட்சிக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் அநாகரீகமாக பேசியதால் , அனந்தபாபுவை மீனசாட்சி கடுமையாக திட்டியுள்ளார். அனந்தபாவு தலைக்கேறிய கோபத்தில் ஆத்திரமடைந்துள்ளார். திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மீனாட்சியை அவர் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மீனாட்சி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை நடந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால், அனந்தபாபுவை யாரும் தடுக்கவில்லை. கோயில் நிகழ்ச்சி காரணமாக அக்கம், பக்கத்தினரும் வீட்டில் இல்லை. இதையடுத்து அனந்தபாபுவின் மனைவி கல்பனா (வயது 29) கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது தன்னுடைய மாமியார் மீனாட்சி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அருகிலேயே கணவர் அனந்தபாபு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுள்ளார்.

தடயத்தை அழிக்க திட்டம்

என்னாச்சு என்று கல்பனா கேட்டுள்ளார். அம்மா என்னை திட்டியதால், மதுபோதையில் கோபப்பட்டு கத்தியால் குத்திவிட்டேன் என்று கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்லன்ஸ் வரவழைத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறினர். காவல்துறையினருக்கு தெரிந்தால் சிக்கல் என்பதால், அதை மறைக்க அனந்தபாபு திட்டமிட்டார்.

இதற்கு கல்பனாவும் உடந்தையாக இருந்துள்ளார். கல்பனாவின் ஆடைகளை அகற்றி மாற்றியுள்ளனர். அதன்பிறகு எதுவும், சாதாரணமாக உறவினர்களுக்கு அழைத்து மீனாட்சி இறப்பு தகவலை கூறியுள்ளனர். உறவினர்கள் வந்த பார்த்தபோது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலாந்துறை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இருவரும் கைது

மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனந்தபாபுவிடம் நடத்திய விசாரணையில், அவர் கொலையை ஒப்புக் கொண்டார். அவருடன், தடயங்களை அழிக்க முயற்சித்த குற்றத்திற்காக மனைவி கல்பனாவும் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+