“தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்.. விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்” - நயினார் நாகேந்திரன் காட்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றப்படாததைச் சுட்டிக்காட்டி, தவெக அரசுக்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. மாறாக, வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Nainar nagendran

இதனிடையே, மதுரை நோக்கி வந்த பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல். முருகன், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "தவெக அரசுக்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது. நேற்று நடந்த விஷயம் இந்துக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. முதல்வர் விஜய்க்கு முதிர்ச்சி இல்லையென்று தோன்றுகிறது.

ஒரு முதல்வராக அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கும் பக்குவம் அவருக்கு இல்லை. சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்டு முதல்வர் விஜய் வீணாகப் போகிறார் என்று நினைக்கிறேன்.

இந்திய அரசியலமைப்புக்கு எதிரான செயலுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக செயல்பட்டதன் விளைவுகளை சட்ட ரீதியாக தமிழ்நாடு முதல்வர் சந்தித்தே தீருவார்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+