சின்னப் புள்ளைங்கள ஏமாத்துற மாதிரி.. நீதியரசர்களை ஏமாற்றிய விஜய் அரசு! விளாசிய நயினார் நாகேந்திரன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முதல்வர் விஜய் செயல்படுத்தவில்லை எனவும், சிறு குழந்தைகளை ஏமாற்றுவது போல நீதிமன்ற நீதி அரசர்களை ஏமாற்றி உள்ளனர் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மழை உச்சியில் தூண் ஒன்று அமைந்துள்ளது. அங்கு தான் ஆண்டாண்டு காலமாக தீபம் ஏற்றப்படுகிறது எனவும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அங்கு தீபம் ஏற்ற உத்தரவேடு வேண்டுமென வழக்கு தொடரப்பட்டது.

Nainar Nagendran Slams Vijay Government

ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு அங்கு தீபம் ஏற்றப்படவில்லை. அதே நேரத்தில் மலை மீது இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மழை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென இடைக்கால அனுமதி வழங்கியது. இதற்கிடையே நேற்றிரவு திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அறிவுறுத்தியது.

இதனால் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கிடையே தீப தூணில் தீபம் ஏற்றப்படும் என காத்திருந்த இந்து அமைப்பினர் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர். இதை அடுத்து சன்னதி வீதியில் போராட்டமும் வெடித்தது.

இதை அடுத்து முருகன் கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சிறு குழந்தைகளை ஏமாற்றுவது போல நீதிமன்ற நீதி அரசர்களை தமிழக அரசு ஏமாற்றியுள்ளது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர்," உச்சநீதிமன்ற தீர்ப்பை முதல்வர் விஜய் செயல்படுத்தவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு எந்த அறிவுறுத்தலும் அரசு வழங்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவோம் என உயர் நீதிமன்றத்தில் சென்று சொல்லிவிட்டு நீதிமன்றத்தை அரசு ஏமாற்றி உள்ளது. சிறு குழந்தைகளை ஏமாற்றுவது போல் நீதிமன்ற நீதி அரசர்களை ஏமாற்றி உள்ளனர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டவருக்கு எந்த பதவி உயர்வும் வழங்கக்கூடாது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் சீராய்வு மனு அளித்து நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி உள்ளது என்றால் பெரும்பான்மை மக்களை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே அர்த்தம். இது போன்ற அரசு தேவையில்லை. தீர்ப்பை அமல்படுத்தவேண்டும் என்பது சட்டத்தின் கடமை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை கிள்ளுக் கீரையாக அரசு நினைத்துள்ளது. தமிழக வெற்றி கழக கூட்டணி கட்சியின் தலைவர்கள் தீப விவகாரத்தில் கவனத்துடன் இனிமேல் செயல்பட வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+