கோடிகளில் புரளும் யோகம் பெறும் கடக ராசி.. ராகு கேது பெயர்ச்சியில் கொட்டும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Rahu ketu peyarchi 2026: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களில் இந்தப் பெயர்ச்சியானது கடக ராசியின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு ராசி, லக்னத்தில் கேது வருவதால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். கேது ராசிக்குள் வரும்போது எல்லோர் மேலும் சந்தேகம் வரும். தூக்கமின்மை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அடுத்த ஒன்றரை வருடத்திக்து தூக்கமின்மையால் பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கும் சூழல் ஏற்படும். எதிர்காலத்தைப் பற்றி யோசித்து குழம்பிக் கொள்ளும் நிலை ஏற்படும்.

rahu-ketu-peyarchi-2026-massive-career-growth-financial-gains-for-kadagam-rasi

பண வரவு கொட்டும்

எல்லாமே இருந்தும் எனக்கு யாரும் இல்லை என்கிற நிலைமை ஏற்படும். 7 ஆம் இடத்தில் வரக்கூடிய கிரகத்தால் கணவராக இருந்தால் மனைவியின் மூலமாக ஏராளமான பெரிய பணம் வந்து சேரும். வியாபாரம் பெரிய அளவில் செல்லும் வாய்ப்பு ஏற்படும். பெரிய வாய்ப்புகள் வந்து சேரும். வேறு மொழி, மதம், இனத்தைச் சேர்ந்த நபர்களால் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படும்.

பார்ட்னர்ஷிப் சூப்பர்

பார்ட்னர்ஷிப் அற்புதமாக இருக்கும். பணத்திற்கான ரிலேஷன்ஷிப் உங்களுக்கு அமையும். வீட்டில் தங்க முடியாத சூழல் ஏற்படும். அந்த அளவுக்கு வேலைப் பளு, அலைச்சல்கள் இருக்கும். விரக்தியின் உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் ஆறு, நதி, கடல் பகுதிக்குச் சென்று முடி வெட்டி, தலை குளித்து வருவது மேன்மையைத் தரும். செல்லப் பிராணிகள் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். அவை இறந்து போவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ஆரோக்கியம்

சைனஸ் பாதிப்பு, இடது கண் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தாயாரின் ஆரோக்கியம், அலர்ஜி, தொற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தாயாருக்கு இடதுபுற மார்பகம் அல்லது பின்புறப் பகுதியில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு கணவன், மனைவிக்குள் ஒருமாதிரியான தன்மை ஏற்படும்.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். நிதி சார்ந்த பெரிய ஒரு அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். எந்த விஷயத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டுமோ அதனை மிகுந்த ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. பண வரவு அதிகமாக இருந்தாலும், இந்த காலகட்டத்தில் விரக்தி ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏறபடும். பண வரவு அபரிமிதமாக இருக்கும். சந்தோஷம் 75 சதவீதமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதமும் அற்புதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+