விபரீத ராஜயோகம் பெறும் மிதுன ராசி.. ராகு கேது பெயர்ச்சியில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
Rahu ketu peyarchi 2026: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களில் இந்தப் பெயர்ச்சியானது மிதுன ராசியின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் ராகு அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும். சனி வீட்டில் ராகு சென்று அமர்ந்திருப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஒன்றை இழந்து இன்னொன்றை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. ஒருவரின் உயில், சொத்துக்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டை விற்று, சொத்து, நிலத்தை விற்று கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள்.

முயற்சியில் வெற்றி
வேறு நாட்டில் இருப்பவர்கள் லாட்டரி, எதிர்பார்க்காத பணம் வரும் விஷயங்கள் மூலமாக பெரும் பணம் வந்து சேரும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பாட்டி, தாத்தாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரும் முயற்சியில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். டிரான்ஸ்போர்ட் துறையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கடன் வாங்காதீர்
ஏற்றமதி, இறக்குமதி செய்பவர்கள் லைசென்ஸ், இன்சூரன்ஸ் கண்டிப்பாக வைத்திருப்பது நன்மை பயக்கும். அகலகால் வைப்பதை தவிர்ப்பது நல்லது. அதிக வட்டி, கடன் வாங்கி சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். பஞ்சி ஜம்பிங், வானில் இருந்து குதிப்பது போன்ற சாகச விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
எதிர்பாராத வெற்றி
அஷ்டமத்தில் ராகு இருப்பதால் வண்டிகளின் ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்பார்க்காத வெற்றிகள் வரக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். குடும்ப ஸ்தானத்துக்கு கேது வருவதால், குடும்பத்தில் உள்ள யாரோ ஒரு நபர் நம்மை விட்டுப் பிரியும் நிலை ஏற்படும். சொல்லக்கூடிய விஷயங்கள் நேரடியாக இருக்கும். வாக்குறுதிகள் கொடுத்தால் அவை தள்ளிப்போய் நடப்பது, நடக்காமல் போவது போன்றவை ஏற்படும் அமைப்பு உள்ளது.
பரிகாரம்
சனிக்கிழமை தோறும் வெள்ளைப் பூசணிக்காய் வைத்து சுற்றி போட்டுக் கொள்வது நல்லது. வீட்டில் குழந்தைகள், பேரக் குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றிப் போடுவது நன்மை பயக்கும். கணவன் மனைவிக்கு வேலை நிமித்தமாக பிரிவது போன்ற அமைப்புள்ளது. குடும்ப விஷயத்திலும், வாக்குறுதி கொடுப்பதிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதாரம் 95 சதவீதமும் அற்புதமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
