Thiruparankundram: உச்சநீதிமன்றமே சொல்லிருச்சே.. தீப தூணில் தீபமேற்றுங்கள்! அகல் விளக்கேற்றி அமைதி போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில். உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி மலை மீது தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றம் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் அகல் விளக்கு தீபம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அப்பகுதி மக்கள்.

புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மழை உச்சியில் தூண் ஒன்று அமைந்துள்ளது. அங்கு தான் ஆண்டாண்டு காலமாக தீபம் ஏற்றப்படுகிறது எனவும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அங்கு தீபம் ஏற்ற உத்தரவேடு வேண்டுமென கடந்த ஆண்டு இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Thiruparankundram Deepam

இந்த வழக்கு விசாரணையின் போது கடந்த ஆண்டு தீபத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை காரணம் காட்டி கடந்த ஆண்டு அங்கு தீபம் ஏற்றப்படவில்லை.

அதே நேரத்தில் மலை மீது இருக்கும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மழை உச்சியில் இருக்கும் தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பளித்தது.

அதே நேரத்தில் மலையில் இருப்பது தீப தூண் அல்ல சர்வே கல் என தமிழக அரசு வாதத்தை முன்வைத்தது. இதற்கிடையே ஏற்கனவே நேற்று இரவு முதல் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதி சிகப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டது. தென்மாவட்டங்களின் இருந்து 5000க்கும் மேற்பட்ட போலீசார் திருப்பரங்குன்றம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட தலைவர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வரலாம் என்பதால் ஆங்காங்கே அவர்கள் போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் திருப்பரங்குன்றம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் சொல்கிறோம் என நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? இல்லை வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு பரபரப்பும் திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளில் அகல் விளக்கு ஏற்றி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் தீப தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. தற்போது உச்சநீதிமன்றமே தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டற்கு நிலையில் தமிழக அரசு அந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி தாங்கள் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், கட்டாயம் இந்த ஆண்டு தீபத்தூரில் தீபம் ஏற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர் வியாபாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+