முதல்வர் விஜய் பற்றி மீண்டும் போஸ்ட் போட்ட பாலாஜி முருகதாஸ்.. இந்த முறை மாற்றம் நடந்திருக்கிறதாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்திய விவகாரம் சில வாரங்களுக்கு முன்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தன்னுடைய வீட்டுக்கு வந்தது குறித்து வீடியோ வெளியிட்டு, கேள்வி எழுப்பிய பாலாஜி தற்போது அதே விவாகரத்தில் புதிய பதிவை வெளியிட்டு இருக்கிறார். இந்த முறை போலீசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து அவர் போட்டிருக்கும் பதிவு கவனம் பெற்றுள்ளது.

பாலாஜி முருகதாஸ் வீட்டில் சோதனை

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதை பொருள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்த சென்றிருந்தனர். அப்போது வீட்டுக்கு போலீசார் வந்தது, அவர்களிடம் பாலாஜி கேள்வி கேட்டது என அந்த வீடியோவை அவரே சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். தன்னுடைய வீட்டில் எதுவும் இல்லை என்றும்ஃ யார் புகார் கொடுத்தார்கள்? எதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது? என்று எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்று அந்த பதிவில் சொல்லியிருந்தார்.

Balaji Murugadoss

அது மட்டும் இல்லாமல் போலீஸ் தன்னுடைய வீட்டுக்கு வந்த பிறகு வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொன்னதாகவும் பாலாஜி பதிவிட்டு இருந்தார். 30 வருடமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன், எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு பிரச்சனையை சந்திக்க வேண்டியது இருக்கிறது என்றும் அந்த பதிவு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

போலீஸ் தரப்பு விளக்கம்

இதற்கிடையே ஆவடி போலீஸ் தரப்பும் சோதனை குறித்து விளக்கம் கொடுத்திருந்தது. அதில், "பாலாஜி சொன்னது போல 15 பேர் சோதனைகளில் ஈடுபடவில்லை. ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் மட்டுமே சோதனை நடத்தியதாகவும் சட்ட நடைமுறைகளை பின்பற்றி சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பாலாஜி முருகதாஸ் பதிவு

இதற்கும் பாலாஜி மறுப்பு தெரிவித்து, எக்ஸ் தளத்தில் தனது வீட்டு சிசிடிவி வீடியோவை வெளியிட்டு இருந்தார். இப்படியாக இந்த விவகாரம் தொடர்ந்து வந்த நிலையில் இப்போது மீண்டும் பாலாஜி முருகதாஸ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், "தமிழக டிஜிபி டாக்டர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் தமிழக காவல்துறைக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய வீட்டு உரிமையாளர்களிடம் பேசி வீட்டில் எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை, தான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை விளக்கியதாகவும் தன் மீது கொடுக்கப்பட்ட புகார் போலியானது என்பதே தெளிவுபடுத்தியதாகவும் பாலாஜி குறிப்பிட்டிருக்கிறார். இதனால் வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை தனக்கு இல்லாமல் போனதாகவும், அதற்காக காவல்துறைக்கு நன்றி என்றும் மேலும் தமிழக முதல்வர் விஜய்க்கும் தனது நன்றியை அவர் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+