144 தடை உத்தரவு ஏன்?.. பதிலளிக்க ஹைகோர்ட் கிளையில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆஜர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நாளான இன்று மதுரை முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில், 144 தடை உத்தரவு ஏன் என்பது குறித்து பதிலளிக்க ஹைகோர்ட் கிளையில் கலெக்டர் ஆஜராகியுள்ளார். முதலில் ஆஜராகாத நிலையில் நீதிபதியின் கண்டிப்பான உத்தரவையடுத்து மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆஜராகினார்.

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணி முதல் நாளை காலை 10 மணி வரை திருப்பரங்குன்றம் உள்பட மதுரை மாவட்டம் முழுவதும் 163 பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவில் தடை உத்தரவு (முன்பு 144 தடை உத்தரவு என்று சொல்லப்படும்) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Collector Nishanth Krishna

ஆஜராகாத கலெக்டர்

இதேபோல, திருப்பரங்குன்றம் கோயில், மலையின் சுற்றுப் பகுதிகளை ரெட் ஜோனாக அறிவித்து டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், 144 தடை உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில், 144 தடை உத்தரவால் கார்த்திகை தீப நாளன்று திருப்பரங்குன்றம் கோவிலுக்கே பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், சுமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா 12.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டார். ஆனால் அவர் ஆஜராகவில்லை. ஆட்சியர் ஆஜராகததால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடிந்து கொண்டதோடு, மதியம் 1.15 மணிக்குள் ஆஜராக உத்தரவிட்டார். மதியம் 1.15 மணிக்கு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் ஆஜராகினர்.

நீதிமன்ற அவமதிப்பு

அப்போது, நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவை அமருமாறு கூறினார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது. 'திருப்பரங்குன்றம் உள்பட மாவட்டம் முழுவதும் பிஎன்எஸ்எஸ் 163 இன் படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், மதுரை ஆட்சியர் இளம் ஐஏஎஸ் அதிகாரி. உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வார் என்றால் துணிச்சலானவர் தான். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் அவர் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்வார். உங்ளுக்கு ஏன் கவலை' என்று கூறினார். இந்த வழக்கு தொடர்பாக துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யனும் ஆஜராகி இருந்தார்.

விசாரணை 4 மணிக்கு ஒத்திவைப்பு

அப்போது, நீதிமன்றம் ''திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளில் உயர்நீதிமன்றம் ஒருபோதும் தலையிடாது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்ற வேண்டும். கடந்த ஆண்டு போலத்தான் இப்போதும் நடக்கிறது. கடந்த ஆண்டு தீபம் ஏற்றாமல் என்ன நடந்ததோ? அதுபோன்று தான் தற்பொழுதும் நடக்கிறது.

அப்போதும் துணை காவல் ஆணையராக இனிகோ திவ்யன் தான் இருந்தார். இப்போதும் அவர் தான் உள்ளார். பக்தர்களின் மத உரிமையை நிறைவேற்ற வேண்டும். இந்த முறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று அறிவுரை வழங்கி, விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+