Om box office: 4 நாளில் தனுஷின் "ஓம்” வசூல் இத்தனை கோடியா? இப்போ நிலைமை இதுதான்!
சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியான ஓம் - ஆப்ரேஷன் மோல் திரைப்படம் திரையரங்குகளில் 4 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. முதல் 3 நாட்களும் ஓரளவுக்கு நல்ல வசூலை தக்கவைத்தும் திங்கட்கிழமையான நான்காவது நாளில் கணிசமாக குறைந்திருக்கிறது. ஆனாலும் ஒட்டுமொத்த வசூலை பார்த்தால் படம் 100 கோடி மைல்கல்லை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய்பல்லவி உள்ளிட்ட கலர் நடித்துள்ள இந்த படம் நவம்பர் 20ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இந்த படம் வந்திருந்தாலும் வெளியான முதல் நாளே படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் வெளியானதால் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் படத்தின் வசூல் தகவலை தெரிந்து கொள்ள ரசிகர்களும் ஆர்வமாக இருந்தனர்.

ஓம் படத்தில் 4 நாள் வசூல்
முன்பதிவிலேயே படத்திற்கு அதிக வசூல் கிடைத்துவிட்டது. முதல் நாள் வசூல் பார்த்தால், இந்தியாவில் மட்டும் சுமார் 18.10 கோடி நிகர வசூல் கிடைத்ததாக கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாளான சனிக்கிழமை வசூல் சற்று குறைந்து 15. 75 கோடியாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை பெரிய சரிவு ஏற்படாமல் மீண்டும் 15. 90 கோடி அளவுக்கு வசூல் கிடைத்து இருக்கிறது. இதனால் முதல் 3 நாட்களில் படம் நல்ல வேகத்திலேயே பயணித்தது.
திங்கள் கிழமை வசூல் நிலவரம்
ஆனால் வாரத்தின் முதல் வேலை நாளான நேற்று திங்கட்கிழமை வசூலில் மாற்றம் தெரிந்திருக்கிறது. 4வது நாளில் இந்தியாவில் சுமார் 6.20 கோடி நிகர வசூல் மட்டுமே கிடைத்துள்ளதாக ஆரம்ப கட்ட பாக்ஸ் ஆபிஸ் கணிப்புகள் தெரிவிக்கின்றன. முதல் 3 நாட்களுடன் ஒப்பிடும்போது இது கணிசமான சரிவு. இருப்பினும் 4 நாட்களில் மொத்த வசூலை எடுத்து பார்த்தால் இந்தியாவில் நிகர வசூல் சுமார் 55.95 கோடியை தொட்டிருக்கிறது. இந்தியாவில் மொத்த வசூல் 64.90 கோடி என்றும் வெளிநாடுகளில் 28.50 கோடி வசூல் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதன்படி, உலக அளவில் 4 நாட்களில் ஓம் படம் மொத்த வசூல் சுமார் 93.40 கோடி அதாவது 100 கோடி உலகளாவிய வசூல் என்ற இலக்கை அடைய இன்னும் கொஞ்ச தூரம் தான் இருக்கிறது. ஆனால் வார இறுதியில் கிடைக்கும் வசூலை திங்கட்கிழமை தக்க வைக்க முடியாது படக்குழு கவனிக்க வேண்டிய விஷயம். இனி வரும் நாட்களில் திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பால் படம் எவ்வளவு வேகமாக அடுத்த மைல்கல்லை எட்டும் என்பது தெரியும்.



Click it and Unblock the Notifications
