கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கு.. தவெக பண்ண மெகா தப்பு.. குட்டு வைத்த சிபிஎம் பாலகிருஷ்ணன்
நாகப்பட்டினம்: தவெக ஆட்சி 6 மாதங்களை கடந்துவிட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்று என சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீதான புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் கலெக்டருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கலெக்டர் புகாரில் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அலட்சியமாக கையாண்ட தவெக அரசை, சிபிஎம் மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். எம்எல்ஏ மீது புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என்பது 100 சதவீதம் சரி என்று சொல்லிவிட முடியாது. சில நேரம் செய்தி வந்து புகார்கள் வராமல் இருக்கும்.

இதெல்லாம் எப்படி தவெக அனுமதிக்கிறது
அதற்காக புகாரை விசாரிக்காமல் இருப்போமோ. என்ன என்று கூட கேட்க மாட்டோமா. சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு காரணங்களால் புகார் கொடுக்காமல் இருந்திருக்கலாம். எம்எல்ஏ என்பதால் புகார் இல்லாமல் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். நேற்று கலெக்டர் புகார் கொடுத்ததால் எப்ஐஆர் போட்டுள்ளார்கள் என்கிற தகவல் பத்திரிகையில் செய்தியாக வந்துள்ளது. கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷை உடனடியாக எம்எல்ஏ பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
ஒரு எம்எல்ஏ மீது கலெக்டர் புகார் கொடுத்திருக்கிறார் என்றால், இது எவ்வளவு பெரிய அநியாயம் இது. ஒரு மாவட்ட கலெக்டருக்கு, ஆளுங்கட்சி எம்எல்ஏ குறுஞ்செய்தி கொடுத்துள்ளார். அந்த புகாரில் கலெக்டர், எம்எல்ஏ ரொம்ப மோசமாக, அராஜகமான முறையில் நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார். எம்எல்ஏவால் அவருக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும். இந்த போக்கை
எப்படி தவெக அரசாங்கம் அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.
புகார் கொடுக்காமலேயே
அவரை உடனடியாக பொறுப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது உரிய தண்டனை வழங்க வேண்டும். எம்எல்ஏ செய்வதை அலட்சியமாக அணுகினால், எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்காவிடின் தவறான முன் உதாரணமாகிவிடும். யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தூண்டிவிடுவது போல ஆகிவிடும். புகார் கொடுக்காமலேயே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுப்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு" என்றார்.


Click it and Unblock the Notifications
