எனது தரப்பையும் விசாரியுங்கள்! கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் வழக்கில் வந்த திடீர் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் ஆட்சியருகத்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. இது குறித்து இன்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில்.. ஆட்சியர் சார்பில் ஆஜரான வழக்கரிஞர், தங்களையும் மனுதாரராக சேர்க்க வேண்டும் எனவும், தங்கள் தரப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட கலெக்டரிடம் இருந்து புகார் பெறப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

kallakurichi TVK MLA Arul Vignesh

வழக்கு

ஆபாச மெசேஜ் அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், ஆட்சியரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி. நாகசைலா, ஆட்சியரையும் இந்த வழக்கில் மனுதாரராகச் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை உடனடியாக நீக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஒரு மாதத்தில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், எம்எல்ஏ மீதான புகார் என்பதால் ஐஜி அல்லது டிஐஜி அந்தஸில் இருக்கும் ஒருவர் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.

சென்னை உயர்தநீமன்றம்

இந்த வழக்கை பொறுத்தவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் திரிசூலி தாக்கல் செய்திருந்தார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் தொடர்பான இந்த விவகாரத்தில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து, நியாயமான மற்றும் விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்பதே அவரது மனுவின் கோரிக்கையாக இருந்தது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெண் ஆட்சியர் சார்பில் வழக்கறிஞர் நாகசைலா தனியாக ஆஜரானார். விசாரணையில் ஆட்சியரின் தரப்பையும் கேட்க வேண்டும் என்றும் அவரையும் மனுதாரராக சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தாக தெரிகிறது.

கோரிக்கை

மேலும், ஆட்சியருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆட்சேபனைக்குரிய பதிவுகள் குறித்தும் வழக்கறிஞர் நாகசைலா நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு டசென்ரார். இதையடுத்து சைபர் குற்றப்பிரிவு அந்த பதிவுகளை நீக்க தேவையான நடவடிக்கைகளை வேண்டும் என நீதிபதி வி. லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார். பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சேதம் ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை என்றும், ஆட்சேபனைக்குரிய பதிவுகளை அரசு தாமாகவே முன்வந்து நீக்கியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஒத்திவைப்பு

இதற்கிடையே அருள் விக்னேஷ் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் ஜான் சத்யன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன் நகலை பெற்று பரிசீலித்த நீதிபதி, பெண் அதிகாரியின் அடையாளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். மேலும், POSH சட்டத்தின்கீழ் புகார் விசாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விசாரணை குழுக்களின் விவரங்களையும், POSH குழு அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும்.. டிசம்பர் 22ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+