1000 முத்தங்கள் புகார்.. முத்துக்குமரன் எங்கே? 5 நாளாக பூட்டிய வீடு! டைட்டில் வின்னரை தேடும் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்று ரசிகர்களிடம் பிரபலமான முத்துக்குமரனை இப்போது போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. இன்ஸ்டாகிராம் பிரபலம் வஹிதா அக்தர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், முத்துக்குமரன் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது வீடு 5 நாட்களுக்கும் மேலாக பூட்டியிருப்பதாக சொல்கிறார்கள்.. இதனால் முத்துக்குமரனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன். வாய்ஸ் ஓவர் கலைஞரான இவர், தனது குரல் வளம், பேச்சாற்றல் காரணமாக பட்டிமன்றங்கள், தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பேசி வந்தார்.. ஆனாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வென்றதால், பட்டிதொட்டியெங்கும் மேலும் பிரபலமானார்.

இவருக்கும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் கடையநல்லூரைச் சேர்ந்த வஹிதா அக்தருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் இப்போது போலீஸ் விசாரணை வரை சென்றுள்ளது.

muthukumaran Missing Case

வஹிதா புகார்

கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் வஹிதா அக்தர் இன்ஸ்டாகிராம் லைவில் வந்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். மதுபானத்துடன் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தன்னுடைய இந்த நிலைக்கு முத்துக்குமரன்தான் காரணம் என்று வஹிதா குற்றம் சாட்டினார். கடந்த அக்டோபர் 4-ம் தேதி இரவு திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும், இரவு முழுவதும் 1000 முத்தங்கள் கொடுத்து உடல் ரீதியாக நெருக்கமாக இருந்ததாகவும் சொன்னார்.. மறுநாள் அதிகாலையில் வீட்டின் அருகே விட்டு சென்றதாகவும், அதன்பிறகு திருமணம் செய்ய மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட வஹிதா, "எனவே இனி என்னால் வாழ முடியாது" என்று கூறியிருந்தார்.

முத்துக்குமரன் மறுப்பு

ஆனால் வஹிதாவின் குற்றச்சாட்டுகளுக்கு முத்துக்குமரன் மறுப்பு தெரிவித்திருந்தார். 2 பேருக்கும் காதல் உறவு இல்லை என்றும், வஹிதா வெளியிட்ட வீடியோக்கள் எடிட்டிங் செய்து சேர்க்கப்பட்டவை.. வஹிதாவுடன் போனில் பேசிய பதிவையும் வெளியிட்டு, "நாம் ஃப்ரெண்ட்ஸாக தானே பழகினோம் வஹிதா" என்று கேட்டிருந்தார்.

உடனே இதற்கு வஹிதா, "ஃப்ரெண்டா பழகும் பெண்ணுடன் தான் உறவு வைத்துக் கொள்வீர்களா"" என்று பதில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பிறகு, வஹிதா வெளியிட்ட வீடியோக்கள், பதிவுகள் என அனைத்துமே சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகின. அத்துடன் முத்துக்குமரனுடன் எடுத்த வீடியோக்கள், அவர் அனுப்பியதாகக் கூறப்படும் மெசேஜ்களையும் வஹிதா பொதுவெளியிலேயே வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார்.

போலீசுக்கு போன வஹிதா

இதனிடையே, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் வஹிதா செயல்படுவதாகக் கூறி முத்துக்குமரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார், குற்றவியல் வழக்கு பதிவு செய்வதற்கு முகாந்திரம் இல்லை என்றும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

உடனே வஹிதாவும் முத்துக்குமரன் மீது போலீசில் புகார் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னுடன் நெருக்கமாகப் பழகி ஏமாற்றியதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரை விசாரித்த விருகம்பாக்கம் மகளிர் போலீசார், முத்துக்குமரன் மீது BNS 69-வது பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.. இந்த BNS 69 என்ற பிரிவு பொய்யான திருமண வாக்குறுதி அளித்து உடலுறவு கொள்வது தொடர்பானது.

இப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முத்துக்குமரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருக்கிறார்கள்.. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனவே போலீசார் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.. ஆனால் முடியவில்லை. அவரது வீட்டிற்கும் சென்று பார்த்துள்ளனர்.. வீடு பூட்டியிருந்தாம்.. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது 5 நாட்களுக்கும் மேலாக வீடு திறக்கப்படவில்லை என்று சொல்கிறார்களாம்.

முத்துக்குமரனுக்கு தனிப்படை தேடுதல்

இதனால் முத்துக்குமரன் தலைமறைவாகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரை பிடிப்பதற்காக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் 2 தனிப்படைகளை அமைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்படையினர் முத்துக்குமரனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிக் பாஸ் டைட்டில் வென்ற பிறகு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற முத்துக்குமரன், இப்போது ஒரு வழக்கில் போலீசாரால் தேடப்படும் நிலை உருவாகியுள்ளது. 5 நாட்களுக்கும் மேலாக அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், போலீசார் அவரைக் கண்டுபிடித்து விசாரணைக்கு அழைத்து வருவார்களா என்பதே இப்போது கவனிக்கப்படும் விஷயமாக உள்ளது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+