"ஆபாச தகவல்கள் பரவுவதை ஏன் தடுக்கல.." பெண் கலெக்டர் ஆபாச மெசேஜ் விவகாரம்! ஐகோர்ட் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சமூக வலைத்தளங்களில் பெண் அதிகாரியின் கண்ணியத்தைப் பாதிக்கும் ஆபாசப் பதிவுகள் இன்னும் ஏன் நீக்கப்படவில்லை என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவாக அருள் விக்னேஷ், பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது கடந்த ஜூலை மாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும், நேற்று வரை இதுபோல ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றே தவெக தரப்பில் சொல்லப்பட்டது.

TVK Kallakurichi

மீண்டும் விசாரணை

இருப்பினும், நேற்று நீதிமன்றம் தலையிட்ட பிறகே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெண் அதிகாரியிடம் புகார் பெற்று, எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு இன்று நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வழக்கறிஞர் ஜான் சத்யன், புகார் பெறப்பட்டு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன் நகலை நீதிமன்றம் கேட்டபோது, அவர் தாக்கல் செய்தார். அதை நீதிபதி பரிசீலித்து கொண்டிருந்தபோது, அந்த நகலை இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை தானே என கேள்வி எழுப்பினார்.

கேள்வி

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை பாதுகாப்பதற்காகவே எஃப்ஐஆர் நகலை பதிவேற்றம் செய்யவில்லை என்றும் ஆனால் ஊடகங்களில் இந்த விவகாரம் விரிவாக வெளியாகி வருவதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நீதிபதி, பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் விஷயங்களை ஊடகங்கள் வெளியிட கூடாது என்றார்.

அதிருப்தி

மேலும், சமூக வலைத்தளங்களில் பரவும் ஆபாசமான செய்திகள் மற்றும் பதிவுகள் ஏன் இன்னும் நீக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டபோது, சேதம் ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதில் எந்த பயனும் இல்லை என நீதிபதி குறிப்பிட்டார். ஆபாசமாக வரும் ஃபேஸ்புக் பதிவுகள் குறித்தும் புகார் தெரிவித்துள்ள நிலையில், அவற்றை தாமாக முன்வந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டாமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பெண்கள் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டத்தின்கீழ் குழு அமைக்கப்பட்டுள்ளதா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தலைமை செயலராக இருந்தாலும், கடைநிலை ஊழியராக இருந்தாலும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டிய உரிமை அனைவருக்கும் உண்டு என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதற்கு தற்போது அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரணை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

உத்தரவு

ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர் எம்எல்ஏ என்பதால், எஸ்பி அந்தஸ்துக்கு மேலான அதிகாரி விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும், ஆபாச பதிவுகளை நீக்குவதில் காவல்துறையின் சைபர் பிரிவு தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இந்த வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், விசாரணைக் குழுக்களின் விவரங்கள், POSH குழு அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும், டிசம்பர் 22ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+