பெண் ஐஏஎஸ் அதிகாரியை ஆபாசமாக பேசி பலர் போஸ்ட் செய்துள்ளனர், அதை நீக்குங்கள்.. நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த போஸ்ட்களை எல்லாம் உடனடியாக நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச, தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில், ஆளும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Madras High Court orders police to ensure its immediate removal Female IAS officer in an obscene manner Post depicting

எழுத்துப்பூர்வமாக ஐஏஎஸ் அதிகாரி புகார்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் ஆர் திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது இதுவரை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் பேசி என்ன நடந்தது என தெரிவிக்க நீதிபதி வி லட்சுமிநாராயணன் உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்தி வைத்தார். இதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறை சார்பில் மாநில தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஆர் ஜான் சத்யன் நீதிமன்றத்தில் முக்கியத் தகவலை சமர்ப்பித்தார்.

யாரும் அரசியல் செய்ய வேண்டாம்

அதில், பெண் ஐஏஎஸ் அதிகாரி நேற்று எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார் எனவும், அந்த புகாரின் படி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, முறைப்படி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. என்று கூறப்பட்டு இருந்தது. இந்த ஆவணங்களை பரிசீலித்த நீதிபதி வி லட்சுமிநாராயணன், பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு எம்.எல்.ஏ அனுப்பியதாகக் கூறப்படும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்தார்.

இதையடுத்து நீதிபதி தமிழக அரசு தரப்புக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக கடந்த ஜூலை மாதமே புகார் அளித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது புகார் அளிக்கும் சூழல் வந்திருக்காதே? யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யாதீர்கள்.. இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.

உடனடியாக பதிவுகளை நீக்குங்கள்

இந்த விவகாரம் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்தும் சிலர் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இப்படி பெண் ஐஏஎஸ் அதிகாரியை அவதூறாக, ஆபாசமாக பேசி பதியப்பட்ட பதிவுகளை எல்லாம் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி யார் யார் தரக்குறைவாக பதிவிட்டுள்ளார்களோ அவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு குறித்து டிஐஜி அல்லது ஐஜி தலைமையில் விசாரணை செய்ய வேண்டும். வரும் டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+