"ஒரு மாதம் தான் டைம்.." பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பி, தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருப்பவர் தவெகவை சேர்ந்த அருள் விக்னேஷ். இவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்ததாகவும் புகார் எழுந்தது.

Chennai high court TVK

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி தரப்பு ஏற்கனவே புகார் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே நவம்பர் 23ஆம் தேதி அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி எழுத்துப்பூர்வமான புகார் அளித்தார்.

இந்த சூழலில் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.. முதலில் நவம்பர் 23ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியரிடமிருந்து புகார் வரவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்றைய தினம் அவர் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. ஜூலை மாதத்திலேயே ஆட்சியர் புகார் தெரிவித்திருந்த நிலையில், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதால், மாவட்ட எஸ்பி விசாரணை நடப்பது போதுமானதாக இருக்காது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, ஐஜி அல்லது டிஐஜி அந்தஸ்திலான மூத்த போலீஸ் அதிகாரி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்திற்குள் விசாரணையை முடித்து டிசம்பர் 22ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தன் மீதான குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். ஆனால், இப்போது நீதிமன்றத்தில் நடப்பதும் அவர் மீது வழக்குப்பதிவாகி இருப்பதும் அவரது கருத்துக்கு நேர்மாறாகவே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+