யாரை காப்பாற்ற பார்க்கிறீர்கள்? ஏன் ஆக்சன் எடுக்கல! கள்ளக்குறிச்சி MLA வழக்கு! நீதிபதி சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி எம்எல்ஏவிற்கு எதிரான வழக்கை இன்று விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், தமிழக அரசையும் காவல்துறையையும் சரமாரியாகக் கேள்வி எழுப்பியதுடன், "யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யாதீர்கள்.. டிஐஜி அல்லது ஐஜி தலைமையில் சிறப்புக் குழு அமைத்து கவனமாக விசாரியுங்கள்" என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் அறிக்கை

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தகாத முறையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறி, வழக்கறிஞர் ஆர். திரிசூலி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நேற்று பிற்பகலில் பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக எழுத்துப்பூர்வமான புகார் அளித்ததைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். மேலும், காவல்துறையின் முதற்கட்ட விசாரணை அறிக்கை அடங்கிய சீல் வைக்கப்பட்ட கோப்பும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Madras High Court Orders DIG or IG-Led Probe in Woman IAS Harassment Case Against TVK MLA Arul Vignesh

நீதிபதியின் சரமாரி கேள்விகள்

ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எம்.எல்.ஏ அனுப்பியதாகக் கூறப்படும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்ததுடன், தமிழக அரசுத் தரப்பிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்:

ஜூலை மாசமே புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையே ஏன்.. பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கடந்த ஜூலை மாதமே இந்த விவகாரம் குறித்துப் புகார் அளித்தும் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை? அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது மீண்டும் புகார் அளிக்கும் சூழல் வந்திருக்காதே என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யாதீர்கள்.. சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம். இந்த வழக்கில் யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யக் கூடாது என நீதிபதி கடுமையாக எச்சரித்தார்.

எந்த அதிகாரி இந்த வழக்கை விசாரிக்கிறார்?.. இந்த வழக்கை யார் விசாரிக்கிறார்கள் என நீதிபதி கேட்டதற்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரித்து வருவதாகத் தமிழக அரசு பதிலளித்தது.

டிஐஜி அல்லது ஐஜி தலைமையில் விசாரிக்க உத்தரவு

மாவட்ட எஸ்.பி. விசாரிப்பதாக அரசு கூறியதைத் தொடர்ந்து, விசாரணையை மேலும் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கை மாவட்ட எஸ்.பி. நிலைக்குப் பதிலாக, டிஐஜி அல்லது ஐஜி அந்தஸ்திலான உயர் அதிகாரி தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும். அவர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்து மிகக் கவனமாக விசாரிக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.

சமூக வலைதள அவதூறு போஸ்ட்களை நீக்க உத்தரவு

மேலும், இந்த விவகாரம் வெளியே வந்த பிறகு, பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியைப் பற்றிச் சமூக வலைதளங்களில் பலர் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசிப் பதிவுகளை வெளியிட்டு வருவதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை ஆபாசமாகப் பேசிப் பலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். அந்தப் பதிவுகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அப்படித் தரக்குறைவாகப் பதிவிட்டவர்கள் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இத்தனை நாட்களாக புகாரே வரவில்லை எனக் கூறி வந்த நிலையில், தற்போது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, உயர்நீதிமன்றமே டிஐஜி அல்லது ஐஜி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது இந்த வழக்கில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+