இனி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! மோசடி புகாரால் முகேன் ராவ் ஆதங்கம்.. என்ன நடந்தது? பின்னணி சம்பவம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பெரிய அளவில் அறிமுகமானவர் முகேன் ராவ். அந்த நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சினிமாவிலும் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இப்போது அவர் நடித்துள்ள "நிறம்" திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களில் இருக்கும் நிலையில் அவரது பெயரில் ஒரு பண மோசடி விவாகரத்தில் அடிபட்டு இருக்கிறது. இதுவரை இந்த விஷயத்தில் பெரிதாக எதுவும் பேசாமல் இருந்த முகேன் ராவ் இப்போது வெளியிட்ட அறிக்கை தான் கவனம் ஈர்த்து இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு, "நீதான்.. நீதான்டி எனக்குள்ள" என்று தொடங்கும் "சத்தியமா நீதாண்டி" என்ற ஆல்பம் பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் முகேன் ராவுக்கு அதிகமாகவே வரவேற்பு இருந்தது. இந்த பாடலை அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடும் போது அதை கேட்பதற்கே பலர் காத்திருந்தனர். இப்போது கூட சோஷியல் மீடியாவில் அந்த வீடியோக்கள் இன்னும் வலம் வருகிறது. எப்படி இருக்க, இப்போ அவர் வெளியிட்ட அறிக்கை மற்றும் அவர் மீது சொன்ன குற்றச்சாட்டுகளும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முகேன் ராவ் பற்றிய சர்ச்சை
அப்படி என்னதான் பிரச்சனை என்று பார்த்தால், தயாரிப்பாளர் மலேசியா பாண்டியன் ஒரு திரைப்படம் தொடர்பாக முகேன் உள்ளிட்ட சிலர் மீது புகார் அளித்து இருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ஒரு படத்துக்காக முன் பணம் கொடுக்கப்பட்டதாகவும், அந்த படம் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் பணத்தை முழுமையாக திருப்பித் தரவில்லை என்றும் தயாரிப்பாளர் தரப்பில் குற்ற சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரில் முகேன் ராவுக்கும் வழங்கப்பட்டதாக கூறப்படும் பணம் 5 லட்சம் அதில் 3. 55 லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்ததாகவும் மீதி பணத்தை வட்டியுடன் சேர்த்து மீட்டு தர வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவாகரத்தில் முகேன் ராவ் சொல்லும் விளக்கம் வேறு மாதிரியாக இருக்கிறது.

முகேன் ராவ் அறிக்கை
அதாவது அவர் வெளியிட்ட அறிக்கையில், "அனைத்து ஊடக நண்பர்கள், நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு.. சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் காட்டிய அக்கறை, அனுப்பிய மெசேஜ்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு திரைப்பட பிராஜெக்டுக்காக நான் அட்வான்ஸ் தொகையை பெற்றிருந்தேன்.
ஆனால் அந்த ப்ராஜெக்ட் தொடர்பாக ஒப்பந்தத்தை காப்பாற்றும் வகையில் சுமார் 8 முதல் 10 மாதங்கள், கிட்டதட்ட ஓராண்டு வரை காத்திருந்தேன். இதற்கிடையில் வேறு 2 திரைப்படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது, அதையும் நான் இழந்தேன். இறுதியில் தயாரிப்பாளர் அந்த படத்தை தயாரிக்காமல் விலக முடிவு செய்தார். இருந்தாலும் நான் அட்வான்ஸாக பெற்ற முழு தொகையையும் திருப்பிக் கொடுக்க முன்வந்து அதை திருப்பி செலுத்தினேன்.
இனி சட்ட நடவடிக்கை
இந்த விவாகரத்தில் எனது பங்கையும், பொறுப்பையும் முழுமையாக நிறைவேற்றி உள்ளேன். இந்த விஷயத்தை தொழில் முறையாக கையாள வேண்டும் என்பதற்காக இதுவரை அமைதி காத்து வந்தேன். இனி உரிய சட்ட நடைமுறைகளில் மூலம் இந்த விவாகரத்தை தொடர முடிவு செய்துள்ளேன். இந்த நேரத்தில் பொதுவெளியில் விவாதங்களில் ஈடுபடவோ அல்லது இது தொடர்பாக கூடுதல் விவரங்களை வெளியிடவும் நான் விரும்பவில்லை. எனது நிலைப்பாட்டை புரிந்து கொண்டு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கம் நன்றி" என்று அந்த அறிக்கையில் அவர் கூறி இருக்கிறார்.

முகேன் ராவ் சினிமா பயணம்
முகேன் ராவை பொரத்தவரை அவர் திடீரென சினிமாவுக்குள் வந்தவர் கிடையாது. மலேசியாவில் பாடகராகவும், நடிகராகவும் பயணத்தை தொடங்கியவர். அவருடைய பாடல்களுக்கும் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. கயல்விழி பாடல் மூலம் பலரது கவனத்தை பெற்றார். அதற்குப் பிறகு தான் பிக் பாஸ் டைட்டில் வென்றார்.
பிக் பாஸில் அக்ஷிதாவுக்கு ரெட் கார்டு கொடுக்குனும்.. TTF வாசனுக்கு சப்போர்ட்டாக இசையமைப்பாளர் பதிவு!
பிக் பாஸ் வெற்றிக்கு பிறகு கிடைத்த புகழை வைத்து மட்டும் நின்று விடாமல் வேலன், ஜின் தி பெட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது ப்ரீத்தி அஸ்ராணி உடன் இணைந்து நடித்துள்ள "நிறம்" படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு புகார் வெளியாகி இருப்பதால், அவரது அறிக்கையும் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications
