திருப்பரங்குன்றம் போகக்கூடாது.. நயினார் உள்பட பாஜக – இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு வீட்டு காவல்?

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட பாஜக தலைவர்கள், இந்து முன்னணியினர் வீட்டுக்காவலில் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் இன்று கார்த்திகை நாளான இன்று ஒருநாள் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

tiruparankundram hindu munnani bjp

மேலும் இன்று கார்த்திகை நாளில் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தவும், மக்கள் கூட்டமாக கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜக தலைவர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் ஆங்காங்கே தடுத்து வைக்கப்பட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல தயாராவதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தான் சில தலைவர்கள், நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்துத்துவாக அமைப்பு, பாஜக நிர்வாகிகள் கூறி உள்ளனர். அதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூர் டவுன் போலீசார் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் சபரிராஜா, தலைவசாசல் போலீசார் சிறுவாச்சூரை சேர்ந்த பாஜக மு்னனாள் நிர்வாகி முருகன் ஆகியோரை வீட்டு காவலில் வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் தம்மம்பட்டி போலீசார் இந்து முன்னணியை சேர்ந்த ராஜா, ஏத்தாப்பூர் போலீசார் இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரசாந்த் ஆகியோரை வீட்டு காவலில் வைத்ததாக அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.

தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தனது எக்ஸ் பக்கத்தில், ''திருக்கார்த்திகை திருநாளில் வீட்டை விட்டு எங்கும் செல்லக் கூடாதாம்.கோவிலுக்கு செல்லக் கூடாதாம். சொல்வது யார்? நம்மஜேசாப் விஜய் அண்ணா அரசாங்கத்தின் காவல்துறை. காலையில் இருந்து வீட்டுக்காவல்'' என கூறியுள்ளார்.

மேலும் திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டின் முன்பு இன்று காலையில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் செல்வதாக வெளியான தகவலால் அவரை போலீசார் வீட்டு காவலில் வைத்ததாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் அதனை காவல்துறையினர் முற்றிலுமாக மறுத்தனர்.

அதேபோல் வீட்டுக்கு வெளியே நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''நான் இன்று மதியம் திருப்பரங்குன்றம் செல்கிறேன். தீபம் ஏற்றுகிறார்களா? இல்லையா? என்பதை பார்க்க அங்கு செல்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நாம் தீபம் ஏற்ற வேண்டும்'' என்றார்.

இதையடுத்து வீட்டுக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டு இருப்பது மற்றும் வீட்டு காவலில் வைத்திருப்பது தொடர்பாக பரவும் தகவல் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நயினார் நாகேந்திரன், ''அப்படி (வீட்டு காவல்) எதுவும் சொல்லவில்லை. இதுபற்றி போலீசாரிடம் தான் கேட்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். இன்று தீபம் ஏற்றவில்லை என்றால் தமிழக முதல்வரை முழுக்க முழுக்க கிறிஸ்தவராக தான் பார்க்க முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் முதல்வராக தான் பார்க்க முடியும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+