500 ரூபாய் தாள்களை அச்சடிக்க அரசுக்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா? 10 ரூபாய் காயினுக்கு இவ்ளோவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் அன்றாடம் கையில் வைத்து புழங்கும் இந்த 500 ரூபாய் தாள்களை அச்சடிக்க இந்திய அரசு எவ்வளவு செலவு செய்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா? ஒரு ரூபாய் நாணயங்கள் தயாரிக்க எவ்வளவு ஆகும் என நினைத்து இருக்கிறீர்களா? இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள உயர் மதிப்பு கொண்ட ரூபாய் தாளாக தற்போது இருப்பது 500 ரூபாய் தாள்கள்தான். ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் அச்சடித்து வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இது மைசூர், நாசிக் மற்றும் தேவாஸ் ஆகிய இடங்களில் உள்ளன.

Do you know how much the central government spends on printing 500-rupee notes in India

ரூ.500 தாள்களை அச்சடிக்க எவ்வளவு செலவு ஆகும்?

ரூபாய் நோட்டுகளை பொறுத்தவரை, வேறு யாரும் எளிதில் அச்சிட முடியாத வகையில் சிறப்பு காகிதம் மற்றும் பிரத்யேக மை கொண்டு அச்சடிக்கப்படுகிற்து. ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் மட்டுமே அச்சடிக்கப்படுகின்றன. எத்தனை ரூபாய் நோட்டு அச்சிட வேண்டும் என்பதை முடிவு செய்து மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு இந்த பணிகள் நடக்கின்றன. 500 ரூபாய் தாளை அச்சிடுவதற்கான செலவு சுமார் ரூ.2.29 ஆகும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

200 ரூபாய் தாளை அச்சிடுவதற்கான செலவு ரூ.2.37 ஆகிறதாம். அதேபோல, 100 ரூபாய் நோட்டு அச்சடிப்பதற்கான செலவு ரூ.1.77 ஆகிறதாம். 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு 1 ரூபாய்க்கும் குறைவுதான். அதாவது வெறும் 95 பைசா மட்டுமே செலவு ஆகிறது. ரூபாய் தாள்கள் மக்கள் புழகக்த்தில் இருக்கும் போது கிழிந்து விடுகின்றன. இதுபோன்ற ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக புதிய ரூபாய் தாள்களை அச்சடித்து வெளியிடுகின்றன.

நாணயங்கள் அச்சடிக்க எவ்வளவு செலவு?

கடந்த 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆர்டிஐ மனுவிற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலின் படி, ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க ரூ.1.11 செலவு ஆகிறதாம். நாணயத்தின் மதிப்பை விட அதை தயாரிக்கும் செலவு அதிகம் ஆகும். துருபிடிக்காத எக்குவால் இது தயாரிக்கப்படுகிறது. 2 ரூபாய் நாணயத்தை தயாரிக்க ரூ.1.28 செலவும், 5 ரூபாய் நாணயத்தை தயாரிக்க ரூ.3.69 ம் செலவு ஆகிறது.

10 ரூபாய் நாணயத்தை தயாரிக்க ரூ.5.54 செலவு ஆகிறதாம். இதை வைத்து பார்க்கும் போது ரூபாய் தாள்களை விட நாணயங்கள் அச்சடிக்கவே அதிகம் செலவு செய்யப்படுகிறது. மும்பை மற்றும் ஐதராபாத் நகரில் உள்ள அரசி மிண்ட் நிறுவனத்தில் (IGM) தயாரிக்கப்படுகின்றன. தற்போது பணவீக்கம் காரணமாக உற்பத்தி செலவுகள் அதிகம் ஆகியிருக்க வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+