Shiv Nadar: அம்பானியை ஓரம் கட்டிய ஷிவ் நாடார்! அதிக நன்கொடை வழங்கி தொடர்ந்து முதலிடம்.. அசத்திய தமிழர்
சென்னை: இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கிய தொழிலதிபர்களின் பட்டியலில் ஷிவ் நாடார் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். 5-வது ஆண்டாக இந்த பட்டியலில் முதலிடம் வகித்து வரும் நிலையில், அதானி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஷிவ் நாடார் அளித்த நன்கொடை எவ்வளவு? அதானி, அம்பானி எவ்வளவு வழங்கியுள்ளனர்? என்பது பற்றிய விவரங்களை இங்கே விரிவாக காண்போம்.
இந்தியாவில் அதிக நன்கொடை அளித்த பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார். ஹெச்.சி.எல் (HCL) நிறுவனனங்களின் தலைவரான ஷிவ் நாடார் குடும்பம் 2026 ஆம் ஆண்டில் ரூ.2,953 கோடி பல்வேறு சமூக நலப்பணிகளுக்காக செலவிடுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை ஆசியாவின் பெரும் பணக்கார்களில் ஒருவராக உள்ள கவுதம் அதானி உள்ளார்.

அம்பானி, அதானி எவ்வளவு வழங்கினர்
கவுதம் அதானி முந்தைய ஆண்டை விட 127 சதவீதம் அதிகமாக நன்கொடை மற்றும் சமூக நலப்பணிகளுக்கு செலவிட்டு 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கவுதம் அதானி நன்கொடையாக இதுவரை செலவிட்ட தொகை ரூ.877 கோடியாகும். இந்தியாவில் துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், மின் உற்பத்தி, விமான நிலைய பராமரிப்பு என உள்கட்டமைப்பு திட்டங்களில் கொடி கட்டி பறந்து வருகிறது அதானி குழுமம். குஜராத்தை பூர்வீகமாக கொண்ட அதானியின் சொத்து மதிப்பு 7.85 லட்சம் கோடி ரூபாயாகும்.
இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் இருப்பது முகேஷ் அம்பானி. ரூ.8.50 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ரீடெய்ல் முதல் தொலைத்தொடர்புத்துறை தனது பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது. முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு செலவிட்டதை ஒரு ஒரு சதவீதம் குறைவாக நன்கொடையாக அளித்துள்ளார். அதாவது ரூ.620 கோடி பொதுப்பணிக்காக செலவிட்டு உள்ளார். கடந்த முறை 3 ஆம் இடம் வகித்து இருந்தார்.
மூன்றாம் இடத்தில் யார்?
லிஸ்ட்டில் மூன்றாம் இடத்தில் இருப்பது பஜாஜ் குழுமங்களை நடத்தி வரும் பஜாஜ் பேமிலி ஆகும். கடந்த முறையை விட 42 சதவீதம் அதிகமாக பொதுப்பணிகளுக்காக பஜாஜ் குழுமம் செலவிட்டுள்ளது. மொத்தம் 632 கோடி ரூபாய் பஜாஜ் குழுமம் செலவிட்டுள்ளது. ஹுரன் இந்தியா மற்றும் எடெல்கிவ் என்ற அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
2026 நிதியண்டில் 219 நன்கொடையாளர்கள் மொத்தமாக சேர்த்து ரூ.11,544 கோடி சமூக பணிகளுக்காக செலவிட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.10,380 கோடி செலவிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட ஒட்டு மொத்தமாக 11 சதவீதம் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ள தொகை உயர்ந்துள்ளது.
யார் இந்த ஷிவ் நாடார்?
அதிக நன்கொடை அளித்த பெரும் செல்வந்தர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் ஷிவ் நாடார். தமிழ்நாட்டை சேர்ந்தவர். தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி அருகே உள்ள மூலைபொழி என்ற கிராமத்தை சேர்ந்தவர். 81 வயதான இவர், 1976 ஆம் ஆண்டு டெல்லியில் இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
கணினி அறிமுகம் ஆக தொடங்கிய கால கட்டத்தில் இவர் தொடங்கிய நிறுவனம், பெரும் வளர்ச்சியை பெற்றது. கணினி உற்பத்தியில் தொடங்கி, மென்பொருள் துறையிலும் ஹெச்.சி.எல் தடம் பதித்தது. பல்வேறு நாடுகளில் ஹெச்.சி.எல் நிறுவனம் இயங்கி வருகிறது. ஷிவ் நாடாரின் மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.2.5 லட்சம் கோடியை தாண்டும்.





Click it and Unblock the Notifications
