விஜய் ஆண்டனியின் "அப்பா குட்டி” படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்! கலங்க வைத்த கடைசி 20 நிமிடம் கை கொடுத்ததா?
சென்னை: நூறு சாமி படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான அப்பா குட்டி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் டிரைலர் வெளியான சமயத்திலேயே இது எமோஷனலான, சென்டிமென்ட் படம் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் படம் நேற்று வெளியான பிறகு கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடித்த சத்தியவான் சாவித்திரி படத்தை கொஞ்சம் ஓவர் டேக் செய்து இருக்கிறது.
அப்பா குட்டி படம் பார்த்த பலர், முதல் பாதி கொஞ்சம் பொறுமையை சோதித்தாலும் இரண்டாம் பாதி கிளைமாக்ஸ் நன்றாகவே வேலை செய்கிறது என சொல்லி வருகிறார்கள். அதிலும் கடைசி காட்சிகளில் விஜய் ஆண்டனி ரசிகர்களை கண்கலங்க வைத்திருக்கிறார். குறிப்பாக நீதிமன்ற காட்சிகள் அங்கு விஜய் ஆண்டனி பேசும் வசனங்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

படத்தின் குறை
அதேபோல எடிட்டிங் வேலை ரொம்பவும் குழப்பமாக இருக்கிறது. பாதிக்கு பிறகு வரவேண்டிய கதையை முன்னாடியே காட்டிவிட்டு, முக்கியத்துவம் கொடுக்க கதையை உப்பு சப்பு இல்லாமல் கொண்டு போனது இந்த படத்தின் குறையாக இருக்கிறது. இப்படி படத்துக்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டுமே வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அப்பா மகள் பாசத்தை வைத்து கடைசியில் ரசிகர்களை உருக வைத்திருக்கிறது அப்பா குட்டி.
அப்பா குட்டி வசூல் நிலவரம்
விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் என்னவென்று பார்த்தால், அதிகபட்சமாக 34 லட்சம் வசூலை இந்திய அளவில் பெற்று இருக்கிறது. நேற்று நவம்பர் 20ஆம் தேதி தனுஷ் நடித்த "ஓம்" படம், கீர்த்தி சுரேஷின், "சத்யவான் சாவித்திரி" என பெரிய படங்களுக்கு மத்தியில் அப்பா குட்டி படமும் வெளியானது.
இதனால் இந்த படம் யாருக்கும் தெரிய வருமா? என்பதே பலருடைய கேள்வியாக இருந்தது. ஆனாலும் சத்யவான் சாவித்திரியை விட இந்த படம் கொஞ்சம் வசூல் அதிகமாக தான் பெற்றிருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னும் வார இறுதி நாட்களில் படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா? இல்லையா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications
