நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்.. தமிழகத்தின் இந்த 6 மாவட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் போடணும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) நடைபெற உள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூா், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 9.16 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த 22 ஆண்டுகளாக போலியோ நோய் பாதிப்பு இல்லை. போலியோவை முற்றிலும் ஒழித்த நாடாக இந்தியா உள்ளது. அதேநேரத்தில், அண்டை நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் காணப்படுகிறது. இதனால், இந்திய போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனை குழு, 21 மாநிலங்களில், 272 மாவட்டங்களை, போலியோ நோயால் பாதிக்கப்படக் கூடிய பகுதியாக அடையாளம் கண்டுள்ளது.

Polio Vaccination

தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள், அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில், நாளை காலை 7 மணி முதல், மாலை 5 மணி வரை, போலியோ சொட்டு மருந்து போடப்பட உள்ளது.

5 வயதிற்கு உட்பட்ட, 9.16 லட்சம் குழந்தைகளுக்கு, 6,647 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடக்க உள்ளன. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஏற்கெனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்க வேண்டும்.

செங்கல்பட்டில், 2.70 லட்சம், தஞ்சாவூரில், 1.82 லட்சம், விருதுநகரில் 1.44 லட்சம், திருநெல்வேலியில், 1.32 லட்சம், சிகவங்கையில், 1.17 லட்சம், மயிலாடுதுறையில் 69,386 குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.

காதார நிலையங்கள், பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாது தனியாா் மருத்துவமனைகளிலும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர நடமாடும் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், திருமண மண்டபங்கள், பயண வழி மையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்படும். இந்தப் பணிகளில், 27,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+