TNPSC Group 4: டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வு! பள்ளி பாடப்புத்தகம் படித்தால் மட்டும் போதுமா? பாஸ் ஆகும் டிரிக்ஸ் என்ன?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு வரும் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டு 6,574 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14,89,000 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஒரு இடத்திற்கு 226 பேர் போட்டியிடுகின்றனர். தேர்வுக்கு இன்னும் இரு மாதங்கள் கூட இல்லாத நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு புதிதாக தேர்வு ஆகிறவர்கள் எதை படிக்க வேண்டும். பள்ளி புத்தகங்கள் மட்டும் போதுமா? என்பது பற்றி பயிற்சி மைய நிபுணர்கள் கூறும் தகவல்களை பார்க்காலாம்.
தமிழை பொறுத்தவரை 100 கேள்விகளில் 40 கேள்விகளுக்கு விடை சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மதிப்பெண் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. ஏனெனில் தமிழ் தகுதி தேர்வாக வைக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4-ல் பயன்பாட்டு தமிழ் கேட்கிறார்கள். இந்த மாதிரி கேள்விகள் வந்தால், கொஞ்சம் யோசித்து பதில் அளிப்பது போலத்தான் இருக்கும்.

ஸ்கூல் புக் மட்டும் போதுமா?
அதைத்தவிர இலக்கணம் முக்கியமானது. அடிப்படை இலக்கணத்தை நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தேர்வர்கள் பலரும் பள்ளி பாடப்புத்தகங்களை படித்தாலே போதுமானது. அதில் இருந்துதான் கேள்விகள் வரும் என்று நினைக்கிறார்கள். பள்ளி பாடப்புத்தகங்கள் முக்கியம்தான். ஆனால் டிஎன்பிஎஸ்சி சிலபஸ்க்கும் பள்ளி பாடப்புத்தகத்திற்கும் தொடர்பு இல்லை என்பதே டிஎன்பிஎஸ்சி முந்தைய காலகட்டங்களில் கொடுத்த விளக்கமாக இருந்துள்ளது.
புதிதாக தேர்வுக்கு படிப்பவர்கள் ஸ்கூல் புக்ஸ் மட்டும் போதுமானது என நினைக்கிறார்கள். இது தவறு. பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகள் வரும் ஆனால் அனைத்துமே அங்கிருந்து மட்டுமே வராது. அதையும் தாண்டி வெளியில் இருந்தே பல வினாக்கள் கேட்கப்படுகின்றன. தோரயமாக 60 சதவீதம் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்தும் 40 சதவீதம் வெளியில் இருந்து கேட்கிறார்கள் என எடுத்துக்கொள்ளலாம். இதுவும் கூட சில நேரங்களில் மாறுபடும்.
டிஎன்பிஸ்சி சிலபசில் கலைச்சொற்கள் என்ற ஒன்று உள்ளது. இந்த கலைச்சொற்கள்தான் பிரச்சினை ஏற்படுத்தக்கூடியதாகும். 10 கேள்விகள் கலைச்சொற்கள் பிரிவில் கேட்கப்படுகின்றன. பள்ளி பாடப்புத்தகங்களில் இந்த கலைச்சொற்கள் உள்ளன. ஆனால் சமீப காலமாக இந்த கலைச்சொற்களை டிஎன்பிஎஸ்சி அவுட் சோர்சில் இருந்தே அதிகம் கேட்பதாக கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
இலக்கணம், கணிதம்
அதுவும் மிகவும் கடினமானதாக கேட்கப்படுவதாக சொல்கிறார்கள். தமிழ் பல்ககைக்கழக பேராசிரியர்கள் கூட திணறும் அளவுக்கு கலைச்சொற்கள் கேட்கப்படுகின்றன. இலக்கணத்திலும் ரொம்ப ஆழமாக கேள்விக வருகின்றன. எனவே, இந்த புத்தகம்தான் படிக்க வேண்டும் என்று உறுதியாக சொல்ல முடியாது. பொது அறிவை பொறுத்தவரை 100 கேள்விகள் இடம் பெற்று இருக்கும். பொது அறிவில் பார்ட் பி -யில் கணித அறிவு பற்றிய கேள்விகள் இடம் பெற்று இருக்கும்.
இதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பார்ட் பி பிரிவில்தான் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும். இதனால், தேர்வர்கள் அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொடர்ச்சியாக படித்தால் மட்டுமே குரூப் 4 தேர்வில் வெற்றி பெற முடியும். தேர்வகள் கணித பார்முலா, இலக்கண விதிகள் உள்ளிட்டவைற்றை மனப்பாடம் செய்து வைத்தால் மட்டுமே எளிதாக விடை அளிக்க முடியும்.
தொடர்ச்சியாக படிக்க வேண்டும்
தேர்வர்கள் பலருக்கும் இருக்கு பிரச்சினை தொடர்ச்சியாக படிப்பது இல்லை. இதுதான் தேர்வர்கள் செய்யும் தவறாக உள்ளது. ஒருநாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் படித்தால் மட்டுமே தேர்ச்சி பெற்று வருவதை நினைத்து பார்க்க முடியும். கணிதத்தை பொறுத்தவரை அதிகம் பயிற்சி எடுக்க வேண்டும். அதே மாதிரி, PYQ என்று சொல்லப்படும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை எடுத்து, பயிற்சி எடுக்க வேண்டும்.
முந்தைய ஆண்டு வினாத்தாளை பார்க்கும் போது தேர்வர்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் உள்ள உயிரியல் பகுதிகளில் உள்ள கலைச்சொற்களை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. தேர்வர்கள் படித்தால் மட்டும் போதாது. அதிகமாக டெஸ்ட் போட்டு பார்க்க வேண்டும். இன்னும் தேர்வுக்கு 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திட்டமிட்டப்படி சிறப்பாக படித்தால் தேர்வர்கள் பாஸ் ஆக வாய்ப்பு உள்ளது.





Click it and Unblock the Notifications
