"சத்தியவான் சாவித்திரி” முதல் நாள் வசூல் இவ்வளவுதானா? பாராட்டு கிடைத்த படத்தின் பரிதாபம்!
சென்னை: கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் உருவான "சத்தியவான் சாவித்திரி" படம் தியேட்டருக்கு வந்ததே பலருக்கு தெரியுமா? என்பது கேள்விக்குறி தான். அந்த படத்தின் ப்ரோமோஷன் கடைசி நேரத்தில் தான் தொடங்கி இருந்தனர். படம் பற்றி பெரிதாக வெளியே தெரியாததாலேயே படம் வெளியான முதல் நாள் வசூலும் படு பயங்கர மோசமாக இருக்கிறது. கொஞ்ச பேர் பார்த்திருந்தாலும் விமர்சன ரீதியாக இந்த படத்திற்கு நல்ல பாராட்டு கிடைத்தது. ஆனால் வசூலில் ஓம் படத்துடன் ஒப்பிடும்போது ரொம்பவும் குறைவாக இருக்கிறது.
இப்பல்லாம் ஒரு படம் வெளியாவதற்கு முன்பே பல மாசங்களுக்கு முன்பு பிரமோஷனை தொடங்கி விடுகிறார்கள். ப்ரமோஷனில் ஆடி, பாடி ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்தி படத்தைப் பற்றி எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மனதில் விதைத்து விடுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சில படங்கள் தியேட்டருக்கு வந்த பிறகு ட்ரோலாகி விடுகிறது. ஆனால் சில படங்களுக்கு ப்ரோமோஷன் இல்லை என்றாலும் தியேட்டருக்கு வந்த பிறகு பாராட்டு கிடைக்கிறது. அதுபோலத்தான் சத்யவான் சாவித்திரி படம் பற்றி வெளியே பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் நேற்று தியேட்டரில் ரிலீஸ் ஆனது.

கீர்த்தி சுரேஷ் பதிலடி
அதற்கு முந்தைய நாளில் தான் ப்ரோமோஷனில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். அப்போது கூட மிஸ்கின் எதார்த்தமாக கீர்த்தி சுரேஷ் தொடையில் கை வைக்க, அதை வைத்தே பலரும் பஞ்சாயத்தை தொடங்கி விட்டனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கிற மாதிரி கீர்த்தி சுரேஷ் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். "மிஸ்கின் என்னுடைய அப்பா மாதிரி. உங்க பார்வைக்கு தப்பா தெரிந்தால் நாங்கள் அதற்கு எதுவும் செய்ய முடியாது. அவர் என்னிடம் தவறான நோக்கத்தில் தொடவில்லை" என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
சத்தியவான் சாவித்திரி வசூல் நிலவரம்
இது ஒரு பக்கம் இருந்தாலும் நேற்று வெளியான சத்தியவான் சாவித்திரிக்கு ஒரு அளவிற்கு நல்ல பாசிட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸின் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் இல்லை. பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் சாக்நிக் வெளியிட்டுள்ள தகவலின் படி பார்க்கும்போது, இந்தியாவில் சுமார் 14 லட்சம் நெட் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்திய கிராஸ் வசூல் சுமார் 16 லட்சம் என்றும் கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷுக்கு கம் பேக்
சென்னையில் தான் படத்திற்கு அதிக வசூல் கிடைத்திருக்கிறது. இருந்தாலும் இது முதல் நாள் கணக்கு மட்டும்தான். படத்தை பார்த்தவர்கள் கொடுக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வார இறுதி நாட்களில் இன்னும் கொஞ்சம் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வருமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே ஓம் படத்திற்கு கலவையான விமர்சனம் வருவதால் இனி ரசிகர்கள் இந்த பக்கம் திரும்பினால் கீர்த்தி சுரேஷுக்கு கம்பேக் நிச்சயம். அவர் சமீப காலமாக லீட் ரோலில் நடிக்கும் படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றி பெறாமல் போகிறது. கெஸ்ட்டாக டோரதி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்து விட்டது. அந்த மாயாஜாலம் இந்த படத்திலும் நடக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications
