தீபம் ஏற்ற அனுமதி.. வரவேற்புக்குரியது! தமிழக அரசு தடுக்க கூடாது - புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் அனுமதி வரவேற்கக்கூடியது. இதை தமிழ்நாடு அரசு தடுக்க கூடாது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள இந்த தீர்ப்பை நான் முழுமனதாக வரவேற்கிறேன். கடந்த ஆண்டு முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு உண்டான முயற்சியில் பல தடைகள் ஏற்பட்டு.. நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

Krishnasamy

நீதிமன்றத்தில், தனி நீதிபதி தீபம் ஏற்றுவதற்கு உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் அதேபோல தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்தார்கள்.

இந்த சூழலில், கடந்த ஆண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு.. தீப தூணில் தீபம் ஏற்ற முடியாமல் போய்விட்டது. தமிழ்நாடு அரசே இரு நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. ஏறக்குறைய ஒரு வார காலத்திற்கு மேலாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் அடிப்படையில்.. நேற்று கொடுக்கப்பட்ட தீர்ப்பில் இந்த ஆண்டு மட்டும் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறது.

அதேபோல, இரு நீதிபதிகள் கொடுத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. எப்படி இருந்தாலும் சாராம்சம் ஒன்றுதான். தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கு இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்க கூடியது. தமிழ்நாடு அரசு எந்த காரணத்தை கொண்டும், வேறு எந்த வழிகளையும் கையாண்டு இதை தடுப்பதற்கு உண்டான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்பது தான் எங்களின் வேண்டுகோள்" என வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+