தங்கம் விலை இன்றும் கடுமையாக சரிய வாய்ப்பு? 10ம் தேதி முதல் நடந்த பெரிய மாற்றம்
சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் நேற்று பவுனுக்கு ரூ.3,760 அதிரடியாக சரிந்து ரூ.92 ஆயிரத்து 80-க்கு விற்பனை ஆகியது . இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் கடந்த நவம்பர் 10-ந்தேதியில் இருந்து மளமளவென சரிந்து வருகிறது. ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை, வெறும் 11 நாட்களில் 13 ஆயிரத்து 960 குறைந்துள்ளது. இன்னும் தங்கம் விலை குறையும் என்றே சொல்கிறார்கள். எவ்வளவு குறைய வாய்ப்பு உள்ளது என்பதை பார்ப்போம்.
தங்கம் விலை கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2025 இறுதியில் அப்படியே டபுள் ஆகியது. 2026 தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சம் தொட்டத்து. ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை கடந்த விற்பனையானது. இந்நிலையில் போர்மேகங்கள் குறைய குறைய தங்கம் விலை சரிய போவதாகவே கூறப்பட்டது. இந்நிலையில்
கடந்த நவம்பர் 10-ந்தேதியில் இருந்து தங்கம் விலையில் தொடர்ந்து இறங்குமுகமாக இருக்கிறது.

கடந்த 18-ந்தேதி கடுமையான சரிவு வந்தது. கடந்த 18-ந்தேதி ஒரு பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 40-ம், கடந்த 19ம் தேதி ரூ.1,880-ம் குறைந்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று (நவம்பர் 20) தங்கம் விலையில் பெரும சரிவு காணப்பட்டது. கடந்த நவம்பர் 19ம் தேதி ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 980-க்கும், ஒரு பவுன் ரூ.95 ஆயிரத்து 840-க்கும் சென்னையில் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.470-ம், பவுனுக்கு ரூ.3 ஆயிரத்து 760-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 510-க்கும், ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்து 80-க்கும் சென்னையில் விற்பனை ஆனது.
தங்கம் விலையை பொதுவாக ஏறும்போது ஒரே நாளில் கடுமையாக அதிகரிக்கும். ஆனால் குறையும் போது அப்படி இருக்காது. ஆனால் நேற்று ஒரே நாளில் ரூ.3,760 சரிந்தது என்பது, இதுவரை இல்லாத சரிவாகும். இதற்கு முன்பு அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.2,500 வரை குறைந்ததே அதிகபட்ச ஒரு நாள் சரிவு என்பதையும் நேற்றைய சரிவு முறியடித்தது. கடந்த 10-ந்தேதியில் இருந்து நேற்று வரையில் கிராமுக்கு ரூ.1,745-ம், பவுனுக்கு ரூ.13 ஆயிரத்து 960-ம் குறைந்திருக்கிறது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உயர்த்தியதால் தான் தங்கம் விலை இப்போது குறைந்துள்ளது. இன்னும் வட்டி விகிதம் உயர்ந்தால், தங்கம் விலை கடுமையாக சரியும் என கூறப்படுகிறது. ஏனெனல அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைகிறது. இதனால் முதலீட்டாளர்கள் வட்டி தராத தங்கத்தை விற்கும் முனைப்பில் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் காரணமாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் விலை குறையவே வாய்ப்பு உள்ளதாம்.சர்வதேச சந்தையில் தங்கம் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 2.45% சரிந்து $3,539/அவுன்ஸ் என்ற அளவில் முடிந்துள்ளது. எனவே தங்கம் விலைகுறையவே வாய்ப்பு உள்ளது. தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்து வருகிறது. நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.



Click it and Unblock the Notifications
