தங்கம் விலைக்கு மரண அடி.. நாளைக்கு இருக்கு பாருங்க ஆட்டம்.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய தினமும் கூட ஒரு சதவிகிதத்திற்கும் மேல் தங்கம் விலை சரிந்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து தங்கம் விலை சரிவின் பாதையில் இருந்தது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்ததே இந்தியாவிலும் அதன் விலை கடுமையாக குறைய பிரதான காரணமாக இருக்கிறது.

Gold Price Crash Gold rate US Gold personal finance

சர்வதேச மார்கெட்

குறிப்பாக இன்று நவம்பர் 20ஆம் தேதி சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை கடந்த ஓராண்டில் இல்லாத குறைந்தபட்ச விலையை தொட்டது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் 8% சரிந்துள்ளது. கடந்த எட்டு மாத காலத்தில் ஒரே வாரத்தில் தங்கம் விலை இந்தளவுக்கு சரிவது இதுவே முதல்முறையாகும்.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1.2% சரிந்து 3,580 டாலராக உள்ளது. வர்த்தகத்தில் ஒரு கட்டத்தில் ஒரு அவுன்ஸ் 3,513.54 டாலர் வரை குறைந்தது. இது 2025 செப்டம்பர் 4ஆம் தேதிக்குப் பிறகு பதிவான மிக குறைந்த விலையாகும். அதேபோல டிசம்பர் மாதத்திற்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் 3% சரிந்து 3,570 டாலராக குறைந்தது.

அமெரிக்க வட்டி விகிதம்

அமெரிக்காவில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். இதனால் டிசம்பர் மாதத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் டிசம்பரில் அமெரிக்க வட்டி விகிதம் 0.25% சதவிகிதம் நிச்சயம் உயர்த்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதுமே வட்டி விகிதம் உயரும்போது, வட்டி வருவாய் தராத தங்கத்தை வைத்திருப்போர் அதை விற்றுவிட்டு அமெரிக்க பத்திரங்களில் முதலீடு செய்வார்கள்.

வல்லுநர்கள் சொல்வது என்ன

இதுகுறித்து க்ரிடிக்கர் மினசர்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி சேஜ் கூறுகையில், "அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு தங்கம் விலை சரிய காரணமாக இருக்கிறது. பத்திர வருவாயும் அமெரிக்க டாலரும் உயர்வதால், வட்டி வருவாய் தராத தங்கத்தை வைத்திருப்பதற்கான செலவு அதிகரிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஏஐ துறை சார்ந்த பங்குகளில் ஏற்பட்டுள்ள சரிவும் தங்கத்தின் விற்பனையை அதிகரித்துள்ளது. அதாவது பங்குச் சந்தையில் ஏற்பட்ட இந்த இழப்புகளை ஈடுகட்டுவதற்காக முதலீட்டாளர்கள் தங்க முதலீடுகளையும் விற்கிறார்கள். இதுவும் கூட தங்கம் விலை சரிய காரணமாக இருக்கிறது. தங்கம் விலை சரிந்துள்ளதால்.. இந்தியா மற்றும் சீனா மக்கள் தங்கத்தை வாங்க இதை ஒரு வாய்ப்பாக பார்க்கிறார்கள்.

நாளை என்ன நடக்கும்

எப்போதும் சர்வதேச மார்கெட்டில் நள்ளிரவில் தங்கம் விலை எப்படி இருக்கிறதோ அதை பொறுத்தே மறுநாள் இந்தியாவில் தங்கம் விலை இருக்கும். இப்போது சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை கிட்டத்தட்ட 1.4% சரிந்துள்ளது. இரவும் கூட இதே டிரெண்ட் நீடித்தால் நாளைய தினம் தங்கம் மீண்டும் பெரியளவில் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+