"அல்லாஹு அக்பர்".. திடீரென அரசு பஸ்சை மறித்து இளைஞர் செய்த செயல்... விசாரணையில் ‘திடுக்' தகவல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் மண்டியாவில் இன்று சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை டூவீலரில் சென்று இடைமறித்த நபர் 'அல்லாகு அக்பர்' என கத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவரை போலீசார் தற்போது பிடித்து விசாரணை நடத்திய நிலையில் அவர் சொன்ன தகவல் திடுக்கிட வைத்தது.

allahu-akbar-youth-taken-into-custody-in-mandya-after-stopping-2-wheeler-infront-of-ksrct-bus-raisi

கர்நாடகாவின் மண்டியா மகாவீர் சர்க்கிள் வழக்கம்போல் இன்று காலையிலும் பிஸியாக இருந்தது. ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

கர்நாடகா அரசு பஸ் ஒன்றும் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் முன்பு இளைஞர் ஒருவர் டூவீலரில் வந்தார். பஸ்சை மறித்து டூவீலரை நிறுத்தினார்.

'அல்லாஹு அக்பர்' கோஷம்

டூவீலரில் இருந்து இறங்கிய அந்த நபர் பஸ்சின் முன்பு நின்று போஸ் கொடுத்ததோடு, திடீரென்று கையை மேலே உயர்த்தி 'அல்லாகு அக்பர்' என கூறிவிட்டு டூவீலரை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றார். இது பஸ்சில் இருந்தவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை கூட்டியது.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர்.இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி மண்டியா போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். எஸ்பி சோபா ராணி விளக்கம் அளித்தார்.

யார் இவர்?

இதுபற்றி எஸ்பி சோபா ராணி, ''பஸ்சை மறித்து கோஷமிட்ட நபர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தினோம். அதன்படி உமர் பாரூக் என்பவரை பிடித்துள்ளோம். அவர் ஹலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்.

எதற்காக பஸ்சை மறித்து கோஷமிட்டது பற்றி விசாரிக்கப்பட்டது. அதற்கு, ''கடவுள் தனது உடல் உள்ளே நுழைந்துவிட்டார்'' என்று கூறினார். இவர் 2வது மனைவியுடன் உள்ளார். அவருடன் பிரச்சனை உள்ளது. சமீபத்தில் தான் 2வது மனைவி உமர் பாரூக் மீது போலீசில் புகார் செய்தார். மேலும் உமர் பாரூக்கின் சமீபத்திய நடவடிக்கையில் மாற்றம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

மனநல சோதனை

அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் அவரது மனநிலையை பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+