கொளத்தூர் தொகுதியில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுவாரா? திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பதில்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கொளத்தூர் தொகுதியில் மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பதில் அளித்துள்ளார். கொளத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவை ஸ்டாலின் தான் எடுப்பார் என்று கூறிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அப்பாவை காணோம் என்றவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஆசை தொண்டர்களுக்கு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 72 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஎஸ் பாபு, நேற்று மதியம் உயிரிழந்தார். அவரின் உடலை தோளில் சுமந்து சென்று முதல்வர் விஜய் இறுதி மரியாதை செலுத்தினார். இதனால் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

Stalin

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் மற்றும் கொளத்தூர் ஆகிய 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. விரைவில் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கொளத்தூர் தொகுதியில் மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஸ்டாலின் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக திமுக தொண்டர்கள் பலரும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் களமிறங்க வேண்டும் என்று பேச தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கொளத்தூர் திமுக தலைவரின் தொகுதி.. அவர் தான் முடிவு செய்வார்.. அவர்தான் அறிவிப்பார்.. எங்களுக்கு போட்டியிட வேண்டும் என்று திமுக தொண்டனாக ஆசை இருக்கிறது. அப்பாவை காணோம் என்று சொல்றவர்களுக்கு, திரும்ப வந்துட்டேன்னு சொல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு ஆசை உள்ளது.

ஆனால் ஸ்டாலின் தான் இறுதி முடிவை எடுப்பார். 6 மாத காலம் புதிதாக வந்தவர்கள் படித்து கொண்டு நிர்வாகத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். 6 மாதத்தில் எந்த வழியாக செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இவர்களுக்கு தனிப்பட்ட பார்வையோ, நோக்கமோ கிடையாது. தவெக அரசை ஆஸ்தான ஜோதிடர்கள் தான் நடத்துகிறார்கள். ஜோதிசம் பலிக்குமா என்று தெரியாது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+