“விவசாயிகளின் கண்ணீரை விட உங்களது Ego பெரிதல்ல” - முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெற்றுத் தரக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பிரதமரை சந்தித்து முறையிடுவோம் என தவெக அரசை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 11 டிஎம்சி பற்றாக்குறை நீரை விடுவிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

cauvery case

காவிரியில் இருந்து பிலிகுண்டுலு வழியாக தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய நீரில் 11.719 டிஎம்சி பற்றாக்குறை உள்ளதாகக் கூறி, அதனை கர்நாடகா விடுவிக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கர்நாடகத்திடம் போதுமான அளவு நீர் இருப்பு இருந்தும், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை தடுத்து வைத்திருப்பதாகவும், தங்களுக்குச் சேர வேண்டிய காவிரி நீரை உடனடியாக விடுவிக்க உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங் அடங்கிய அமர்வு, தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழ்நாடு அரசுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?

காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!

🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?

முதலமைச்சர் அவர்களே...

அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!

விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!" எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+