திருமணத்திற்கு பிறகு நடிகர் அஸ்வின் வெளியிட்ட பதிவு.. இந்த கல்யாண ஏற்பாடு எப்படி நடந்தது என உருக்கம்
சென்னை: குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்த நடிகர் அஸ்வின் குமாருக்கு இன்று திருமணம் முடிந்த நிலையில், தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அதற்கு அழகான கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். அதோடு தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள், ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் கவனம் பெற்றுள்ளது.
அஸ்வின் குமார் - புவனேஸ்வரி திருமணம் இன்று (நவம்பர் 20) குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்று இருக்கிறது. பெரிய அளவில் ஆடம்பரமாக இல்லாமல், குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன் தங்களுடைய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கி இருப்பதாக அஸ்வின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அஸ்வின் வெளியிட்ட பதிவு
மேலும் அதில், தனது திருமண தேதியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட அஸ்வின், "பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆசிர்வாதத்துடன் நாங்கள் திருமண பந்தத்தில் இணைந்து இருக்கிறோம். இந்த அமைதியான குடும்ப நிகழ்வை மகிழ்ச்சியாக கொண்டாடிய எங்களுக்கு தொடர்ந்து அன்பு, ஆதரவு கொடுத்த ஊடக நண்பர்கள், சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தை நாங்கள் இருவரும் ஒன்றாக தொடங்கும் போது உங்களின் தொடர்ச்சியான ஆசீர்வாதத்தையும், நல்வாழ்த்துக்களும் எங்களுக்கு வேண்டும். இப்படிக்கு அஸ்வின் குமார்" என்று அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.
நடிகர் அஸ்வின் திருமண போட்டோஸ்
மேலும் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்து, "வாழ்க்கையில் நாம் எதிர்பார்ப்பதை விட பெரிய திட்டம் இருக்கிறது. காதலிக்க வேண்டிய ஒருவரை வாழ்க்கை நமக்கு சரியான நேரத்தில் சேர்த்து வைக்கிறது" என்று அர்த்தத்தில் பகிர்ந்திருக்கும் வார்த்தைகள் திருமண புகைப்படங்களுடன் அழகாக பொருந்தி இருக்கிறது. அஸ்வினை பொறுத்தவரை குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தான் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது.
அஸ்வின் பற்றிய விமர்சனம்
அதற்கு முன்பு விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்திருந்தார். அதுபோல சில ஆல்பம் பாடல்களிலும் டான்ஸ் ஆடி இருந்தார். அந்த பாடல்கள் கூட அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தவருக்கு, என்ன விலை அழகே படம் கிடைத்தது. அந்த படத்தின் ஆடியோ லான்ஜில் அவர் பேசியது அவருக்கு எதிராக திரும்பி விட்டது. அவர் கதை கேட்கும் போது நான் தூங்கி விடுவேன் என்று சொன்னதை வைத்து இப்போ வரைக்கும் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
நேற்று தெரிந்த ரகசியம்
அந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி அவர் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். சமீபத்தில் கூட சில திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். செம்பி திரைப்படமும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. சினிமா வாழ்க்கை ஒரு பக்கம் இருந்தாலும், திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான். நேற்று மாலையில் தான் இன்று (நவம்பர் 20) திருமணம் என்ற தகவலே வெளியானது.

அதுவரைக்கும் இவருடைய காதல் விஷயம் ரகசியமாகவே இருந்தது. அதனால் அஸ்வின் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு யாரு என்று இணையத்தில் தேடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான் அந்த பெண் இயக்குனர் ராஜசேகரின் பேத்தி என்பதே பலருக்கும் தெரிய வந்தது. இயக்குனர் ராஜசேகர் யார் என்றால், நடிகர் ரஜினியை வைத்து மாப்பிள்ளை, தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.
வைரலாகும் பதிவு
அதேபோல கமல்ஹாசனை வைத்தும் காக்கிச்சட்டை, விக்ரம் போன்ற படங்களை இயக்கி இருந்தார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே 43 வயதில் ராஜசேகர் காலமாகி விட்டார். இப்போது அவருடைய பேத்தியை தான் அஸ்வின் திருமணம் செய்து இருக்கிறார். அஸ்வின் திருமண வீடியோக்கள் காலையிலேயே சோசியல் மீடியாவில் லீக் ஆகிவிட்டது. இப்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்களும் ரசிகர்கள், பிரபலங்களின் வாழ்த்து மழையில் வைரல் ஆகிறது.



Click it and Unblock the Notifications
