ஸ்டாலின் எடப்பாடிக்கு தந்த பொறுப்பு? கிலியில் தவெக? ஆட்சியைக் காக்க விஜய் போட்ட மாஸ்டர் பிளான்
சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது முதல்வர் விஜய்யை யோசிக்க வைத்துள்ளதாம்.. இது வெறும் அரசியல் விமர்சனம்தானா அல்லது தவெக ஆட்சிக்கு எதிராக ஏதாவது திட்டம் தயாராகிறதா என்ற கேள்வி விஜய் தரப்பில் எழுந்துள்ளது. இதுகுறித்துதான் நமக்கு ஒரு எக்ஸ்ளூசிவ் தகவல் கிடைத்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சிக்கு எதிராக திமுகவும் அதிமுகவும் ஏதாவது அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே, இடதுசாரி கட்சிகளின் ஆதரவு தொடர்பாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
இந்தச் சூழலில், ஸ்டாலினின் பேச்சை முதல்வர் விஜய் எப்படி எடுத்துக்கொண்டார், இதன் பின்னணியில் அவர் நடத்திய ஆலோசனை என்ன, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஏன் டெல்லிக்கு அனுப்பப்பட்டார் என்பது குறித்து நமக்கு ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து தவெக தரப்பில் நம்மிடம் கூறும்போது" சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி செல்லும் முன்பு, தனது ஆலோசகர்கள் மற்றும் அமைச்சர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, தனிச்செயலாளர் ஜெகதீஸ், அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி. நிர்மல்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஸ்டாலின் சொன்ன வார்த்தை
அதில், ஸ்டாலின் கூறிய ஆட்சி மாற்றம் தொடர்பான கருத்தின் பின்னணி என்னவாக இருக்கும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.. திமுகவும் அதிமுகவும் இணைந்து தவெக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்வதாகக் கூறப்படும் தகவல்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது விஜய்யிடம், "ஆட்சியை கவிழ்ப்பதில் திமுகவும், அதிமுகவும் இணைந்து திட்டமிடுவது உண்மை தான். ஆனால், இதில் நேரடியாக திமுக களத்தில் இறங்காமல், மொத்த பொறுப்பையும் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளார் ஸ்டாலின். இவர்கள் இருவரும் வாரத்துக்கு ஒரு முறையாவது ஃபோனில் பேசிக் கொள்கிறார்கள். அதனால், ஆட்சியை கவிழ்ப்பதில் பகீரத முயற்சியில் இருக்கிறார்கள்.
சட்டமன்றம் கூடும் போது, நம் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுகவும் அதிமுகவும் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தீர்மானத்தை ஜெயிக்க வைக்க முடியும் என்றால் தான் இந்த அக்னி பரீட்ச்சையில் அவர்கள் இறங்குவார்கள். இல்லாவிட்டால் அமைதியாகி விடுவார்கள்.
கம்யூனிஸ்ட்கள் ஆதரவு
நமக்கு வெளியிலருந்து ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தமிழக தலைவர்களின் ஆதரவை கேட்கும் முயற்சியையும் எடுப்பார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தால் அன்றைய சூழலில் அது குறித்து பரிசீலிப்போம் என சொல்லியிருப்பதும் கூட திமுகவிடம் இன்னும் அவர்கள் நட்புறவில் இருக்கிறார்கள் என்பதுதான். அதனால், இடதுசாரிகளின் தேசிய தலைவர்களை சந்தித்து விவாதிக்க வேண்டும்" என்றெல்லாம் ஆலோசனையின்போது விஜய்யிடம் சொல்லப்பட்டுள்ளது.
டெல்லி - இடதுசாரிகள்
இந்த ஆலோசனையின் முடிவில்தான், விஜய் டெல்லி செல்வதற்கு முன்பாக ஆதவ் அர்ஜுனாவை அங்கு அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இடதுசாரி கட்சிகளின் தேசியத் தலைவர்களைச் சந்தித்து, தவெக அரசுக்கு அவர்களின் ஆதரவு தொடர வேண்டும் என்பது குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, விஜய்க்கு முன்பாகவே ஆதவ் அர்ஜுனா டெல்லிக்குச் சென்றிருக்கிறார். ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்தபடியே, இடதுசாரி கட்சிகளின் தேசியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் என்று தவெக தரப்பில் நம்மிடம் தெரிவிக்கின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் எழில்




Click it and Unblock the Notifications
