Guidance தமிழ்நாட்டில் பெரும் ராஜினாமா சர்ச்சை.. என்ன நடந்தது? நிர்வாகம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 ஜூலை மாதத்தில் Guidance தமிழ்நாட்டில் பெருமளவிலான ராஜினாமாக்கள் எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்களில் வெளியான செய்திகள் இதற்கு மாறாக உள்ளன. பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது என்பது ஒரு நிறுவனத்தில் இயல்பான நிகழ்வு தான். Guidance தமிழ்நாடு நிறுவனத்தில், சிறந்த வேலைவாய்ப்புகள், உயர் கல்வி, இடமாற்றம், தனிப்பட்ட அல்லது குடும்பக் காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகப் பணியாளர்கள் வெளியேறுகின்றனர் என கைடன் தமிழ்நாடு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக பேச்சு நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை Guidance TN அமைப்பில் பணியாற்றியவர்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்க்கியதாகவும், அது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் 15 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

resignation controversy

ஆந்திராவில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்

அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் ஆந்திர அரசின் தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்துத் தரும் பணியில் சேர்ந்துள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் பணியாளர்களோ, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகத்தில் பணி செய்யும் சூழல் இல்லை என்றும், அதனால் புதிய அரசு பதவியேற்ற ஒரு மாதத்தில் பதவி விலகி விட்டதாக சில ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

தென்கொரியா நிறுவனங்கள்

அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 3 தென் கொரிய நிறுவனங்களின் ரூ.1614 கோடி முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றன. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் என்ஃபீல்டு, Haier Electronics போன்ற நிறுவனங்களும் தமிழகத்தின் போட்டி மாநிலமான ஆந்திராவில் தொழில் முதலீடுகளை செய்ய தீர்மானித்துள்ளன. இத்தகைய சூழலில் தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசிய தகவல்கள் Guidance TN அமைப்பிலிருந்து கசியவிடப்பட்டதாக செய்திகள் பரவின.

'கைடன்ஸ் தமிழ்நாடு' விளக்கம்

இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் விளக்கம் அளித்துள்ள 'கைடன்ஸ் தமிழ்நாடு' இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொதுமக்களின் கவனத்திற்கு, ஒரு பொறுப்புள்ள நிறுவனமாக, தற்போது பரவி வரும் வதந்திகளுக்குப் பதிலளிப்பதையும், பொதுமக்களின் நலன் கருதி உண்மைகளைத் தெளிவுபடுத்துவதையும் 'கைடன்ஸ் தமிழ்நாடு' (Guidance Tamil Nadu) தனது கடமையாகக் கருதுகிறது. சமீபத்திய ஊடகச் செய்திகள் குறித்த உண்மை நிலையைத் தெளிவுபடுத்தவும், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை மீதான எங்களது உறுதியை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தவும் விரும்புகிறோம்.

resignation controversy

அதிக அளவில் ராஜினாமாக்கள் நடைபெறவில்லை

அதிக அளவிலான ராஜினாமாக்கள் நடந்ததாக பரவியது குறித்து விளக்கம் அளிக்கம் இது. 2026 ஜூலை மாதத்தில் Guidance தமிழ்நாட்டில் பெருமளவிலான ராஜினாமாக்கள் எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்களில் வெளியான செய்திகள் இதற்கு மாறாக உள்ளன. பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது என்பது ஒரு நிறுவனத்தில் இயல்பான நிகழ்வு தான். Guidance தமிழ்நாடு நிறுவனத்தில், சிறந்த வேலைவாய்ப்புகள், உயர் கல்வி, இடமாற்றம், தனிப்பட்ட அல்லது குடும்பக் காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகப் பணியாளர்கள் வெளியேறுகின்றனர்.

ஆக்கப்பூர்வமான போட்டி

வேறு வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் பணியாளர்களின் தொழில் சார்ந்த விருப்பங்களை Guidance தமிழ்நாடு எப்போதும் மதித்து வந்துள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு தனது அண்டை மாநிலங்களுடன் ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டியை எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இருவருக்கும் தமிழ்நாடு தொடர்ந்து விருப்பமான முதலீட்டு இடமாக இருந்து வருகிறது" இவ்வாறு 'கைடன்ஸ் தமிழ்நாடு' விளக்கம் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+