உலகத்தையே புரட்டி போட்ட முஸ்லிம் மக்கள் தொகை கணிப்பு.. இந்தியாவில் 2070ல் எப்படி இருக்கும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரே ஒரு ஆய்வு முடிவினால் இன்று இந்தியாவின் முஸ்லிம் மக்கள்தொகை தொகை குறித்த விவாதத்தை சமூக வலைதளத்தில் அதிகமாக்கி உள்ளது. இந்தியாவில் இந்துக்களே பெரும்பான்மையாக உள்ளனர். எனினும் முஸ்லிம்கள் எண்ணிக்கை என்பது சுதந்திரத்திற்குப் பிறகு தொடர்ந்து அதிகரித்தே வந்தது. 1951ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சுமார் 3.54 கோடியாக இருந்த முஸ்லிம் மக்கள்தொகை, 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 17.22 கோடியாக உயர்ந்தது.

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே அதிகரித்துள்ளது. இதற்கிடையே, பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய உலகளாவிய மத அடிப்படையிலான மக்கள்தொகை கணிப்பு என்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆய்வின்படி, 2035ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய மதக் குழுவாக கிறிஸ்தவர்களை முஸ்லிம்கள் முந்துவார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

Muslim population

எனினும், இந்தியாவின் மக்கள்தொகை அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் இந்தியா தொடர்ந்து இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடாகவே இருக்கும் என்றும், முஸ்லிம்கள் இரண்டாவது பெரிய மதச் சமூகமாகத் தொடர்வார்கள் என்றும் கணிப்புகள் சொல்கின்றன.

முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை

1947ஆம் ஆண்டுக்கு முன்பு, முஸ்லிம்கள் மக்கள்தொகையில் சுமார் 24.3% (1941ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 9.45 கோடி) இருந்தனர். ஆனால், இது அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கள்தொகையாக இருந்தது. அப்போது பாகிஸ்தான் மற்றும் வங்கதேசமாகப் பிரிந்த பகுதிகளும் இதில் அடங்கியிருந்தன. நாட்டுப் பிரிவினை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இடம்பெயர்வுகளுக்குப் பிறகு, சுதந்திர இந்தியாவில் 1951ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 3.54 கோடியாக குறைந்தது. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 9.8% ஆகும்.

முஸ்லிம்களின் எண்ணிக்கை 17.22 கோடி

2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, முஸ்லிம்களின் எண்ணிக்கை 17.22 கோடியாக உயர்ந்து இருந்தது. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 14.23% ஆகும். இந்தியாவில் மத அடிப்படையிலான மக்கள்தொகை விவரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சமீபத்திய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டுதான். அதன்பிறகு புதிய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகவே இல்லை. மக்கள்தொகை மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்கு சில தனியார் ஆய்வுகளும் மாநில அளவிலான கணக்கெடுப்புகளும் முக்கிய ஆதாரங்களாக இப்போது உள்ளன.

பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வான The Future of World Religions: Population Growth Projections கணிப்பின்படி, இந்தியாவில் 2020ஆம் ஆண்டு சுமார் 21.3 கோடி முஸ்லிம்கள் இருந்ததாகக் கூறுகிறது. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 15.2% ஆகும். 2070ஆம் ஆண்டுக்குள் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 33.4 கோடியாக உயரலாம் என்றும், மொத்த மக்கள்தொகையில் அவர்களின் பங்கு 19.6% ஆக இருக்கலாம் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக முஸ்லிம் மக்கள்தொகை (2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பு

உத்தரப் பிரதேசம் 3.85 கோடி 19.26%
மேற்கு வங்கம் 2.47 கோடி 27.01%
அசாம் 1.07 கோடி 34.22%
கேரளா 88.73 லட்சம் 26.56%
ஜம்மு காஷ்மீர் 85.67 லட்சம் 68.31%
மகாராஷ்டிரா 1.30 கோடி 11.54%
பீகார் 1.76 கோடி 16.87%
கர்நாடகா 78.93 லட்சம் 12.92%
ஜார்க்கண்ட் 47.94 லட்சம் 14.53%
ராஜஸ்தான் 62.15 லட்சம் 9.07%
குஜராத் 58.47 லட்சம் 9.67%
மத்தியப் பிரதேசம் 47.75 லட்சம் 6.57%
தமிழ்நாடு 42.29 லட்சம் 5.86%
ஆந்திரப் பிரதேசம் 80.82 லட்சம் 9.56%
டெல்லி 21.59 லட்சம் 12.86%
ஹரியானா 17.81 லட்சம் 7.03%

இந்தியாவில் நிகழாது

இந்த ஆய்வின்படி, 2070ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகையில் இந்துக்கள் 75.8% ஆக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 79.4% ஆக இருந்தது. கிறிஸ்தவர்களின் மக்கள்தொகைப் பங்கு சுமார் 2.2% என்ற அளவில் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 2035ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை முந்துவார்கள் என்ற கணிப்பை, இந்தியாவிலும் அதே மாற்றம் நிகழும் என்பதற்கான கணிப்பாக நாம் புரிந்துகொள்ளக் கூடாது.

குழந்தைப்பேறு விகிதம்

மதச் சமூகங்களின் மக்கள்தொகை கணிப்பு என்பது குழந்தைப்பேறு விகிதம் மற்றும் வயது அடிப்படையிலான மக்கள்தொகை அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இருக்கிறது. இந்தியாவின் தேசிய குடும்ப நல ஆய்வு-5 (NFHS-5, 2019-21) தரவுகளின்படி, ஒரு முஸ்லிம் பெண்ணின் மொத்த குழந்தைப்பேறு விகிதம் 2.36 ஆகவும், இந்துப் பெண்ணின் குழந்தைப்பேறு விகிதம் 1.94 ஆகவும் பதிவாகி இருக்கிறது. ஆனால் தற்போது அனைத்து மதச் சமூகங்களிலும் குழந்தைப்பேறு விகிதம் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மதச் சமூகங்களுக்கு இடையிலான இந்த வித்தியாசமும் கணிசமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

பீகாரில் எப்படி

மாநில அளவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில கணக்கெடுப்புகளும் ஆய்வு தொர்பாக கூடுதல் தகவல்களை தந்துள்ளன. பீகாரில் 2023ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, முஸ்லிம்களின் மக்கள்தொகை சுமார் 2.31 கோடியாக இருந்தது. இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 17.7% ஆகும். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் பதிவான 1.76 கோடியுடன் ஒப்பிடும்போது இது அதிகமாகும்.

கர்நாடகாவில் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூகப் பொருளாதார மற்றும் கல்வி ஆய்வின்படி, அங்கு சுமார் 76.99 லட்சம் முஸ்லிம்கள் இருந்தனர். இது கணக்கெடுப்பில் இடம்பெற்ற மக்கள்தொகையில் சுமார் 12.9% ஆகும்.

உத்தரப் பிரதேசத்தில் அதிக முஸ்லிம்கள்

புவியியல் அடிப்படையில், இந்திய மாநிலங்களில் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அங்கு சுமார் 3.85 கோடி முஸ்லிம்கள் இருந்தனர். மேற்கு வங்கத்தில் 2.47 கோடி பேரும், பீகாரில் 1.76 கோடி பேரும் இருந்தனர். அசாம் மற்றும் கேரளாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகைப் பங்கு முறையே 34.22% மற்றும் 26.56% ஆக இருந்தது.

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

15 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, 2027ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட உள்ள அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மத அடிப்படையிலான மக்கள்தொகை விவரங்களைப் புதுப்பித்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புதான் அதிகாரப்பூர்வ அடிப்படைத் தரவாக இருக்கும். அதே நேரத்தில், பியூ ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய மதிப்பீடுகள் மக்கள்தொகை மாற்றங்கள் குறித்து புதிய விவரங்களை தந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+