கணவனுக்கு வந்த தர்மபுரி நர்ஸின் ஆபாச வீடியோ.. மொபைல் டேட்டா அழித்த அரூர் டிரைவர்.. என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் அலுவலகத்தில் டிரைவராக பணிபுரியும் ஒருவருக்கும், தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. அந்த பெண் உறவை முறித்துக் கொண்ட பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக டிரைவர் மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது தர்மபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகம் வரை சென்றுள்ளது. என்ன நடந்தது என்பதை சுருக்கமாக இங்கே பார்ப்போம்..!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் கலைவாணன். இவர் அரூர் வேளாண் அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Dharmapuri

தர்மபுரி டிரைவர் - நர்ஸ்

நாளடைவில் 2 பேருமே நெருங்கிப் பழகி வந்துள்ளனர். அடிக்கடி தனியாக சந்திப்பது, ஒன்றாக நேரம் செலவிடுவது என இருந்ததுடன், இருவருக்கும் இடையே பணப் பரிவர்த்தனைகளும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கலைவாணனுக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருப்பதை கேள்விப்பட்டு நர்ஸ், ஷாக்கானார். அதனால் அவருடனான பழக்கத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

செல்போனை ரீசெட் செய்த டிரைவர்

ஆனால், கலைவாணன் அந்த பெண்ணை விடாமல் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவரிடம் பேச முயற்சிப்பது, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது என அடுத்தடுத்த டார்ச்சரிலும் இறங்கியிருக்கிறார்.

ஒரு நாள் தனியாக பேச வேண்டும் எனக் கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்ற கலைவாணன், அவரது செல்போனை வாங்கியுள்ளார். அதில் இருந்த மெசேஜ்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், போட்டோக்கள், வீடியோக்கள், பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் மொத்தத்தையும் அழித்துவிட்டு செல்போனை ரீசெட் செய்து தந்துவிட்டாராம்.. இதுகுறித்து கேட்டதற்கு அந்த பெண்ணை தாக்கியதாகவும் தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட நர்ஸ் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். ஆனால், தனது புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது..

கணவனுக்கு ஆபாச வீடியோ

இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ரமேஷ் என்பவர் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். குடும்ப பிரச்சனை என்பதால் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி சமரசம் செய்து கொள்ளலாம் என அவர் முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த சமரசத்துக்கு பிறகும் கலைவாணன் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாராம்.

இத்தனை டார்ச்சர் தந்தபோதும், அந்த பெண் எதற்குமே களங்காமல், அவரது மிரட்டலுக்கு அடிபணியாலும் இருந்துள்ளனர்.. இது கலைவாணனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. உடனே இருவரும் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்களை அந்த பெண்ணின் கணவருக்கே அனுப்பி வைத்துவிட்டாராம் கலைவாணன்.. அத்துடன் பெண்ணின் உறவினர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்..

பொறுமையிழந்த நர்ஸ்

இதனால் அதிர்ச்சியடைந்த, கலைவாணனிடம் இதுகுறித்து தட்டிக் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அத்தனை பேர் மீதும் காவல் நிலையத்தில் கலைவாணன் புகார் தந்துவிட்டாராம்.. இவ்வளவும் செய்ததுடன், அந்த அந்தரங்க வீடியோக்களை சோஷியல் மீடியாவிலும் அப்லோடு செய்ய போவதாக கலைவாணன் பெண்ணை மிரட்டி வருகிறாராம்.. இதற்கு மேலும் பொறுமையிழந்த அந்த பெண், நேரடியாக தர்மபுரி மாவட்ட எஸ்.பி. ஆபீசுக்கே சென்று கலைவாணன் மீது புகார் அளித்துள்ளார்.

எஸ்பி ஆபீஸில் புகார்

"எனக்கு தொல்லை கொடுத்தவர் மீது ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, எனக்காக கேள்வி கேட்ட உறவினர் மீது மட்டும் ஒருதலைப்பட்சமாக வழக்கு பதிவு செய்துளளனர். என்னுடைய அனுமதி இல்லாமல் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கணவர் உள்ளிட்ட உறவினர்களுக்கு அனுப்பிய கலைவாணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தரங்க வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவாமல் தடுக்க வேண்டும், என்னுடைய செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள், உரையாடல்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை விவரங்களை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும் " என பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+