அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களை வாங்க பெருமாள் முருகனும் பரிந்துரை! சஸ்பெண்டான நூலகர் வாதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை வாங்க எழுத்தாளர் பெருமாள் முருகனும்தான் பரிந்துரை செய்தார் என சஸ்பெண்ட் செய்யப்பட்ட சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் காமாட்சி தரப்பு வாதத்தை முன் வைத்தது.

கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதை வெளியே கொண்டு வந்தவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். இந்த நூலகத்தில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்கள், போலி ஆசிரியர்கள், அதிக விலைக்கு புத்தகங்கள் வாங்கியது உள்ளிட்டவை குறித்து அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

perumal murugan madurai

நாலடியார் நூலை ஒரு கவிஞராக சித்தரித்து ஒரு நூலில் இடம் பெற்றுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த தவறான தகவல்களும் இடம் பெற்றிருந்தன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோவை அறிவலகத்தில் இருந்து 1800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அகற்றப்பட்டன.

அதே போல் மதுரை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் போலி புத்தகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் ஆய்வு நடத்தும் பணி நடந்தது. இதையடுத்து புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக 5 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து பொது நூலகத்துறை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக துணை தலைமை நூலகர் காமாட்சி, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக நூலகர் தினேஷ், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக நூலகர் மற்றும் தகவல் அதிகாரி சந்தானகிருஷ்ணன், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக நூலகர் மற்றும் தகவல் அதிகாரி சந்தான கார்த்திகேயன், பொது நூலக தலைமை கணக்கு அலுவலர் ஜூலியட் என 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த பணியிடை நீக்கத்தை எதிர்த்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகர் காமாட்சி, தனது பணியிடை நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காமாட்சி தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், நூலகங்களுக்கு நூல்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவில் பெருமாள் முருகன் இடம் பெற்றிருந்தார். அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை கொள்முதல் செய்ய பெருமாள் முருகனும் பரிந்துரை செய்திருந்தார்.

இந்த புத்தகங்களை கொள்முதல் செய்த விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் நூலகர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை வாங்க எதன் அடிப்படையில் பெருமாள் முருகன் பரிந்துரை செய்தார் என்பதை அவர் விளக்குவாரா என காமாட்சி தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தகங்களை பரிந்துரை செய்த குழுவில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் சந்திரமோகன், ஜெயந்தி, ஆர்த்தி ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரும் என தெரிவித்த நீதிபதிகள், புத்தக கொள்முதல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு எதிராக கோர்ட் தலையிட முடியாது. ஆனால் ஐஏஎஸ் அதிகாரிகளின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டும் தொடர்ந்து நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+