மகளுக்காக அர்ஜுன் புகார் கொடுத்த பின்னணி காரணம்! பயில்வான் பார்த்த பெரிய வேலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அர்ஜுன் நேற்று (நவம்பர் 19) தனது மூத்த மகள் மீது அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் அர்ஜுன் இப்படி ஒரு முடிவு எடுப்பதற்கு காரணம் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோ தான். அந்த வீடியோவில் அவர் சொன்ன குற்றசாட்டு, அர்ஜுனை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றதால் லீகல் ஆக்ஷன் எடுத்திருக்கிறார்.

ஆக்சன் கிங்காக சினிமாவில் பார்த்து ரசித்த அர்ஜுன், நிஜ வாழ்க்கையிலும் என்னுடைய குடும்பத்திற்கு பிரச்சனை என்றால் நான் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன் என்று இப்போ தரமான சம்பவம் செய்திருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது மகள் திருமணத்தை வெளிநாட்டில் பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார். திருமணம் முடிந்து சென்னைக்கு வந்ததும் முதல் வேலையாக கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்திருக்கிறார். அது குறித்து ஒரு பதிவும் வெளியிட்டு இருந்தார். தன்னுடைய மகள் மதுவுக்கு அடிமையாகி விட்டாள் என்று சிலர் விமர்சித்து வருகிறார்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்து இருப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்று கோபமாகவே அந்த பதிவில் அவர் சொல்லி இருக்கிறார்.

Arjun Aishwarya Tamil cinema umapati

மகளுக்காக தந்தை சப்போர்ட்

ஏற்கனவே நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தம்பி ராமையாவின் மகள் உமாபதியும் காதலித்து வந்தனர். இவர்களுடைய காதல் விஷயம் அர்ஜுனுக்கு தெரிய வந்ததும் அதற்கு சம்மதித்து பிரம்மாண்டமாகவே தனது மூத்த மகள் திருமணத்தை செய்து இருந்தார். அதற்கு பிறகு தனது 2வது மகள் வெளிநாட்டு நபர் ஒருவரை காதலிக்கும் விஷயத்தை தெரிந்து கொண்டதும், அந்த திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது மகள் அஞ்சனாவில் எங்கேஜ்மென்ட் நடந்தது. அப்போது கூட அந்த நிகழ்ச்சியில ஐஸ்வர்யா தனது கணவர் மற்றும் கணவருடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு சில வாரங்களுக்கு முன்பு அஞ்சனாவின் திருமணம் நடைபெற்றது. அதில் ஐஸ்வர்யா தனியாக கலந்து கொண்டார். அவருடைய கணவர் உமா பதியோ அல்லது தம்பி ராமையா குடும்பத்தினரோ கலந்து கொள்ளவில்லை. இதுதான் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

பயில்வான் ரங்கநாதன் பேசியது

ஐஸ்வர்யா மற்றும் உமாபதி இருவருக்கும் பிரச்சனையா? இருவரும் பிரிந்து விட்டார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு இடையில் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், "தம்பி ராமையா தன்னுடைய மகன் கல்யாணத்திற்கு பிறகு சென்னையில் ஒரு வீடு எடுத்து கொடுத்து தனது மகனையும், மருமகளையும் தனிக்குடித்தனம் வைத்திருக்கிறார். அங்கு ஐஸ்வர்யா தன்னுடைய கணவன் முன்பே மது அருந்தி இருக்கிறார்.

ஐஸ்வர்யா குடிப்பார் என்பது உமாபதிக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் இப்படி தினமும் குடிப்பார் என்பது அவருக்கு தெரியாது. ஒரு கட்டத்தில் உமாபதி ஐஸ்வர்யாவை அடித்து இருகிறார்.

இதனால் கணவரிடம் சொல்லாமலேயே, தன்னுடைய அப்பா வீட்டுக்கு ஐஸ்வர்யா ஓடிப் போய்விட்டார். புருஷனிடம் சொல்லாமல் போனால் எந்த கணவனாவது போய் மனைவியை கூப்பிடுவானா? அவனும் ஆம்பளை தானே? அதனால தான் உமாபதி ஐஸ்வர்யாவை கூப்பிட போகவே இல்லை" என்று பக்கத்தில் இருந்து பார்த்தது போலவே ஒரு வீடியோவில் பேசி இருந்தார்.

நடிகர் அர்ஜுன் கொடுத்த புகார்

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும், அதற்கு பிறகு இதற்கு கண்ணு, காது, மூக்கு வைத்து பலரும் விமர்சிக்க தொடங்கி விட்டனர். ஐஸ்வர்யாவை பற்றி நெகட்டிவ் ஆகவே விமர்சனம் வந்து கொண்டிருந்தது. இதையெல்லாம் பார்த்து கோபமான அர்ஜுன் தான் இப்போ கமிஷனர் ஆபீசில் புகார் கொடுத்து இருக்கிறார்.

அதில் அவர் கொடுத்த விளக்கத்தில், "என்னுடைய குடும்ப விஷயத்தை பற்றி இப்படி பொதுவெளியில் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய மூத்த மகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும், விவாதங்களும் எழுந்து வருகிறது.

மகளே சொல்லுவார்

அவரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் அவர் தனி உரிமை மதித்து அது குறித்து கருத்து தெரிவிப்பதை நான் திட்டமிட்டே தவிர்த்து வந்தேன்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உரிமையும், தனக்கு பிடித்தபடி வாழும் சுதந்திரமும் உள்ளது. அவர் விரும்பினால் சரியான நேரத்தில் தனது தரப்பிலான வழக்கத்தை அவரே தெரிவிப்பார். ஆனால் ஒரு தந்தையாக எனது மகளையும், அவளது குணத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையும் குறி வைத்து ஆதாரமற்ற மற்றும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.

நடிகர்களாகிய நாங்கள் பொது வாழ்க்கையில் இருக்கும் போது யூகங்களும், விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவை என்பதை புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் யூகங்களுக்கும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு பரப்புவதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. பொதுவெளியில் இருப்பதால் யார் வேண்டுமென்றாலும் கதைகளை புனைந்து பரப்புவதற்கு ஒருவரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதற்கு உரிமை அளிப்பதல்ல.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு

எந்தவித ஆதாரமுமின்றி ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது உள்ளிட்ட ஆதாரமற்ற மற்றும் இழிவான கருத்துக்களை தெரிவிப்பது மிகவும் பொறுப்பேற்றது, ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

அமைதி காப்பதே பல நேரங்களில் கண்ணியமான அணுகுமுறை என்று நாங்கள் எப்போதும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால் எங்களது மவுனத்தை இதுபோன்ற செயல்களால் ஏற்றுக்கொள்வதாக கருதக்கூடாது. அது போல் தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுவதற்கும், பெரிதாக்கப்படுவதற்கும் எங்களது அமைதி அனுமதி அளிக்காது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று அர்ஜுன் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதனுக்கு பிரச்சனை

இன்னும் சில விஷயங்களையும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது நடிகர் மற்றும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சொன்ன குற்றச்சாட்டுகளால் மனம் வெறுத்து அர்ஜுன் இந்த புகார் கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. அதோடு ஒரு சிலர் வேண்டுமென்றே ஐஸ்வர்யா மீது குற்றச்சாற்று வைத்து வீடியோக்கள் வெளியிட்டு வந்ததால் அவர்களை அப்படி பேச சொன்னது யார்? என்று விசாரிக்க வேண்டும் என்றும் அர்ஜுன் புகாரில் சொல்லி இருக்கிறார்.

இதனால் ஒரு குடும்ப பிரச்சனையை வைத்து குளிர் காய நினைத்த பலருக்கு இனி பஞ்சாயத்து வரப்போகிறது. அர்ஜுன் இதை லீகலாக கொண்டு போய் இருப்பதால் தவறாக வீடியோக்கள் வெளியிட்ட பலருடைய முகத்திரை கிழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+