என் மகளுக்கு மட்டுமல்ல, எந்த பொண்ணுக்கும் இனி இப்படி நடக்க கூடாது! கமிஷனர் ஆபீஸ்க்கு போன நடிகர் அர்ஜுன்
சென்னை: நடிகர் அர்ஜுன் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா பற்றி பரவி வரும் சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கிற மாதிரி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். சமீபத்தில் அவருடைய 2வது மகள் அஞ்சனாவின் திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மூத்த மகள் ஐஸ்வர்யா, கணவர் உமாபதி மற்றும் அவருடைய குடும்பத்தினர் யாரும் இல்லாமல் தனியாக கலந்து கொண்டார். இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கிற மாதிரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்ட நடிகர் அர்ஜுன் இப்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் கொடுத்து இருக்கிறார்.
நடிகர் அர்ஜுன் பதிவு
அர்ஜுன் வெளியிட்ட பதிவில், முதலில் தனது இரண்டாவது மகளின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, பிறகு மூத்த மகள் பற்றி பரவி வரும் சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது, " என்னுடைய இரண்டாவது மகள் திருமணத்தின் போது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும், விவாதங்களும் எழுந்தது. அவரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் அவருடைய தனி உரிமை மதிப்பு குறித்து கருத்து தெரிவிப்பதை நான் திட்டமிட்டே தவிர்த்து வந்தேன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது. அதனால் அவருடைய வாழ்க்கை பற்றிய விஷயத்தை அவரே பேசுவார். அவருக்கு எப்போது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த சமயத்தில் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வார். ஆனால் ஒரு தந்தையாக என்னுடைய மகளையும், அவருடைய குணத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையின் குறி வைத்து ஆதாரம் அற்ற வகையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது" என்று அந்த பதிவில் சொல்லி இருந்தார்.

அர்ஜுன் கொடுத்த புகார்
அதாவது, சமீப காலமாகவே ஐஸ்வர்யா பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. அவர் உமா பதியை வேண்டாம் என்று விரட்டிவிட்டார், தம்பி ராமையா ஆரம்பத்திலிருந்து இந்த குடும்பம் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தார் ஆனால் ஐஸ்வர்யா விடாப்பிடியாக உமா பதியே திருமணம் செய்து கொண்டார், அப்படி இருக்கும்போது இப்போது உமாபதி இயக்கிய படம் தோல்வி அடைந்ததால் அவரை வேண்டாம் என்று துரத்திவிட்டார் என்று சில யூடியூபர்கள் பேசி இருக்கிறார்கள்.
அதிலும் இன்னும் ஒரு சிலர் ஐஸ்வர்யா மதுவுக்கு அடிமையாகிவிட்டார், அதை தட்டி கேட்ட உமாபதியை வேண்டாம் என்று பிரிந்து விட்டார் என்றும் வாய் கூசாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் எந்த அப்பா சும்மா இருப்பார்? அதனாலேயே இப்போ அர்ஜுன் தனது மகளுக்காக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.
அப்பா அப்பா தான்
தனது மகளை பற்றி தவறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல என் மகளுக்கு நடந்த சம்பவம் இனி எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது, ஏற்கனவே அவர்கள் பிரச்சனையில் இருக்கும்போது அவர்களுடைய வாழ்க்கையை பற்றி இவர்களாக யூகங்களோடு பேசிக் கொண்டிருப்பதை நான் பொறுத்து இருக்க முடியாது என்று அர்ஜுன் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார்.
நிஜ லைஃப் ஹீரோ
நடிகர் அர்ஜுனின் இந்த செயல் இப்போ சோசியல் மீடியாவில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தனது மகள் காதலிக்கிறேன் என்றதும் முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தவர் அர்ஜுன்தான். இப்போது அவருடைய மகளுக்கு வரும் அவதூறுகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்து, மகளுக்கு அரணாக இருப்பதும் அர்ஜுன்தான். ஆக்சன் கிங் அர்ஜுன் ரீல் லைஃபில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருக்கிறார். இந்த புகாரில் யாரெல்லாம் சிக்க போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.




Click it and Unblock the Notifications
