GTA 6ல் வரும் முக்கியமான இடம்.. உருவாக்கியதில் 1,615 இந்தியர்களின் உழைப்பு! பெங்களூர் டீம் சாதனை!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த GTA 6 வீடியோ கேம் நேற்று வெளியானது. இதற்கிடையே இந்த கேமை உருவாக்கத்தில் இந்தியாவுக்கும் முக்கியப் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் உள்ள ராக்ஸ்டார் கேம்ஸ் ஸ்டுடியோவில் பணியாற்றும் 1,600க்கும் மேற்பட்ட டெவலப்பர்கள் இந்த கேமை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

உலகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த GTA 6 கேம் நள்ளிரவில் வெளியானது. GTA 5 ரிலீஸ் ஆகி சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு GTA 6 வெளியாகும் நிலையில், கேம் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு காத்திருந்தனர். நேற்றிரவே பலரும் GTA 6ல் மூழ்க ஆரம்பித்துவிட்டனர் என்றே சொல்லலாம்.

GTA 6 release GTA 6 video game

பெங்களூர் டீம்

GTA 6 வெளியீட்டுக்கான கவுன்ட்டவுன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த பிரம்மாண்ட கேமை உருவாக்குவதில் நம்ம பெங்களூருக்கும் முக்கிய பங்கு இருந்து என்ற தகவல் கவனம் பெற்றுள்ளது. வைட்ஃபீல்டில் அமைந்துள்ள ராக்ஸ்டார் இந்தியா ஸ்டுடியோவில் சுமார் 1,615 டெவலப்பர்கள் இந்த கேமிற்காக பணியாற்றியதாக கேமிங் துறை சார்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. GTA 6ஐ உருவாக்கியதில் இந்த டீமிற்கும் மிக முக்கிய பங்கு இருந்ததாக கூறப்படுகிறது.

GTA 6 கேம் நடக்கும் கற்பனையான அமெரிக்க மாகாணமான லியோனிடாவில் பல்வேறு நகரங்கள், கடற்கரை பகுதிகள், கட்டிடங்கள் என விரிவான செட்அப் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் சுற்றுச்சூழல் வடிவமைப்பு, கேமுக்கான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பெங்களூர் டீம் வேலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைஸ் பீச்

குறிப்பாக, லியோனிடாவில் இடம்பெறும் வைஸ் பீச் என்ற இடத்தை உருவாக்குவதில் இந்த டீம் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் GTA 6 விளையாடும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பார்க்கப்போகும் சில முக்கியமான காட்சிகள் மற்றும் இடங்களை உருவாக்குவதில் இந்திய டெவலப்பர்களின் உழைப்பும் இடம் பெற்றுள்ளது.

இதற்கிடையே பெங்களூரின் கேமிங் துறை வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் வரலாற்றையும் தேஜஸ்வி சூர்யா பகிர்ந்துள்ளார். 1995ஆம் ஆண்டு ராஜேஷ் ராவ் என்பவர் ஒரே ஒரு கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு துருவா இன்டிராக்டிவ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். சிறிய முயற்சியாக தொடங்கிய இந்த நிறுவனம், இந்தியாவின் முதல் கேம் டெவலப்மெண்ட் ஸ்டுடியோவாக வளர்ந்தது.

ஒரு ஆள் தொடங்கிய கேம் கம்பெனி

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தேஜஸ்வி சூர்யா, பெங்களூர் என்றாலே பலருக்கும் ஐடி துறை தான் நினைவுக்கு வரும் என்றும் ஆனால் பெங்களூரின் ஐடியை தாண்டி அதன் தொழில்நுட்பம் விரைந்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.. மேலும், துருவா இன்டிராக்டிவ் நிறுவனம் 2019ஆம் ஆண்டு ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராக்ஸ்டார் இந்தியாவின் பெங்களூர் டீம் இதற்கு முன்பும் முக்கியமான கேம்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, GTA V மற்றும் Red Dead Redemption 2 ஆகிய பிரபலமான கேம்களிலும் இந்த டீம் பணியாற்றியுள்ளனர்.

GTA 6

GTA 6 இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு கேமை விளையாடும் வகையில் ராக்ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தற்போது PlayStation 5 மற்றும் Xbox Series X|S தளங்களில் இந்த கேம் கிடைக்கிறது. விரைவில் கம்யூட்டர்களுக்கும் வெளியாகும் என தெரிகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனை மாகாணமான லியோனிடாவில் கதை நடைபெறுகிறது. இதில் லூசியா காமினோஸ் மற்றும் ஜேசன் டுவால் ஆகிய இருவர் முக்கிய கேரக்டராக உள்ளனர். குற்ற செயல்களில் ஈடுபடும் இந்த ஜோடியை சுற்றியே கதை நடக்கிறது. இந்த கேமை உருவாக்க 1 பில்லியன் முதல் 1.5 பில்லியன் டாலர் வரை செலவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+