புயல் போனா என்ன? அடுத்த வாரம் பெரிய சம்பவம் இருக்கு! வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அக்வான் புயல் ஒடிசா பக்கத்தில் நாளை கரையை கடக்கிறது. இருப்பினம் அடுத்த வாரத்திலிருந்து தமிழகத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி நவ.22 வரை தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளிலும் அதேபோல, வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நவ.23ம் தேதி சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை என டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என்றும், நவ.24ம் தேதி கடலூர் தொடங்கி புதுக்கோட்டை வரை 5 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
